“தட்றோம்.. தூக்குறோம்!”.. ‘வேறலெவல்’ ப்ளான்களுடன் வந்த ‘கஞ்சா திருடர்கள்’! .. கடைசியில் காத்திருந்த ‘மரண’ பங்கம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தென்மேற்கு பிரான்சில் வித்தியாசமான ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இந்த வழக்கின்படி கஞ்சா திருட்டில் பிடிபட்ட 6 பேர் மீது திருட்டு மற்றும் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யபடவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. பிரான்சின் Nouvelle Aquitaine பகுதியில் நீதிமன்றத்திற்கு வந்த இந்த வழக்கின்படி கஞ்சா பயிர்களை அறுத்துச் செல்வதற்காக திட்டமிட்டு வந்த ஆறு திருடர்கள் வசமாக போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அதன்பிறகு போலீசார் அவர்களை பரிசோதனை செய்த பிறகுதான், அவர்கள் அறுவடை செய்தது கஞ்சா பயிர் அல்ல சணல் பயிர் என்று தெரியவந்தது.
காகிதம், துணி, மக்கும் பிளாஸ்டிக் பை, பசுமை எரிபொருள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படும் சணல் பயிரும், போதை பொருளாக பயன்படுத்தப்படும் கஞ்சா செடிகளும் பார்ப்பதற்கு, ஒரே மாதிரி இருந்ததால் கஞ்சா செடிகளை திருடுவதாக எண்ணி சணல் பயிர்களை மாங்கு மாங்கு என்று அறுத்துள்ளனர் இந்த அதிமேதாவிகள்.
எனினும் கஞ்சா கிடைக்காவிட்டாலும் இவர்களின் நோக்கம் கஞ்சா திருட்டுதான் என்று முடிவு செய்த போலீசார், இந்த 6 பேரையும் கைது செய்து காவலில் அடைத்திருந்தனர். இவர்கள் வரும் நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்