காட்டுத்தீ ‘நிவாரண’ நிதிக்காக... ‘மாடல்’ செய்த ‘காரியத்தால்'... பக்கத்தை ‘பிளாக்’ செய்த ‘இன்ஸ்டாகிராம்’...
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்காக மாடல் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்து 7 லட்சம் டாலர்கள் திரட்டியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாடலான கைலன் வார்ட் (20) கடந்த 4ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். ஒரு புகைப்படத்திற்கு 10 டாலர்கள் அனுப்ப வேண்டும். இந்த தொகை ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைலன் வார்ட் இதன் மூலம் 2 நாட்களில் 7 லட்சம் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடி) நிதியை திரட்டியுள்ளார்.
அதே நேரத்தில் அவர் திரட்டிய நிதியை காட்டுத்தீ நிவாரணத்திற்காக அனுப்பவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அவர், “நான் திரட்டிய நிதியை எனக்காக பயன்படுத்தவில்லை. வேண்டுமென்றால் ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்கு நேரடியாகவே நிதியை அனுப்பி, அதற்கான ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் அவருடைய பக்கத்தை நிரந்தரமாக முடக்கியுள்ளது. நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்து காட்டுத்தீ நிவாரணப் பணிக்கு கைலன் வார்ட் நிதி திரட்டியதற்கு சிலர் பாராட்டுகளையும், சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.