LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

ஆளே இல்லாத தீவு.. ஆனா Hi Tech வசதிகள்.. சுற்றுலாவாசிகளை சுண்டி இழுக்கும் குட்டித்தீவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவீடனில் உள்ள சிறிய தீவு ஒன்று சுற்றுலாவாசிகளின் விருப்பத்திற்குரிய இடமாக திகழ்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆளே இல்லாத தீவு.. ஆனா Hi Tech வசதிகள்.. சுற்றுலாவாசிகளை சுண்டி இழுக்கும் குட்டித்தீவு..!

Also Read | 75 வருஷதுக்கு முன்னாடி பிரிஞ்சுபோன 2 குடும்பம்.. ஒரே வீடியோவால் நடந்த அற்புதம்.. நெகிழ வச்ச பின்னணி..!

சுற்றுலா

சுற்றுலாவாசிகளின் விருப்பத்துக்குரிய இடமாக திகழ்கிறது ஐரோப்பா. இதமான காலநிலை, பழங்கால கட்டிடங்கள், எழில்கொஞ்சும் கடற்கரைகள் என உலக சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்த்து வருகின்றன ஐரோப்பிய நாடுகள். இங்கே வரும் பயணிகளை திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை இங்குள்ள தீவுகள். அளவில் மிகச் சிறியவையாக இருந்தாலும், தேர்ந்த நட்சத்திர ஹோட்டல்கள் போல அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றன இந்த தீவுகள்.

Inside the remote Swedish island surrounded by rocks

அந்த வகையில் பிரசித்திபெற்றது சுவீடனில் அமைந்திருக்கும் தீவு ஒன்றுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர். இதற்கு இங்குள்ள பழமையான கலங்கரை விளக்கத்தின் பழைமை வாய்ந்த வரலாறும் ஒரு காரணம். பேட்டர் நோஸ்டர் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படும் இது கடந்த 1868 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுவீடனில் தெற்கு கடற்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவு கடுமையான நீரோட்டங்களை கொண்டது. பாறைகளும் அதிக அளவில் அமைந்திருக்கின்றன. இதில் சிக்கி 900க்கும் அதிகமாக கப்பல்கள் சேதமடைந்த நிலையில், கப்பல்களை காப்பாற்றும் நோக்கில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.

Inside the remote Swedish island surrounded by rocks

கலங்கரை விளக்கம்

1977 ஆம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்பாக கலங்கரை விளக்கம் மாறியது. இதனிடையே இதை சுற்றிலும் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 250 மீட்டர் நீளமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவில் இருந்து சுவீடனுக்கு செல்ல வேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் கடலில் பயணிக்க வேண்டும்.

Inside the remote Swedish island surrounded by rocks

இந்த தீவில் கலங்கரை விளக்கத்தின் பராமரிப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். இதில், சுற்றுலாவாசிகளுக்கும் பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஸ்பா, வீட்டில் தயாரிக்கப்பட்ட காலை சிற்றுண்டிகள், கடல் உணவுகள், வசதியான படுக்கையறை என உயர்தர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இங்கேயும் கிடைக்கின்றன. இதற்கு 1000 டாலர்கள் செலவாகலாம் எனச் சொல்லப்படுகிறது. இயற்கைக்கு மத்தியில் கடலுக்கு நடுவே விடுமுறை தினங்களை செலவிட விரும்புவோருக்கு இது நிச்சயம் உகந்த இடமாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

Also Read | எதே.. 3 மாம்பழம் 10 லட்சம் ரூபாயா..? ஏலத்துல வந்த போட்டி.. இலங்கையில் நடந்த சுவராஸ்யம்..!

SWEDISH ISLAND, ROCKS

மற்ற செய்திகள்