"எது, தூக்கத்துல இருந்து எழுப்புனா காசா??.." மாசம் 25 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர்.. ஐடியா'வ கேட்டு அசந்து போவீங்க..
முகப்பு > செய்திகள் > உலகம்சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில், அதிகம் பிரபலம் அடையும் பலரும், எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக வித்தியாசமான மற்றும் வினோதமான ஐடியாக்களை கையில் எடுப்பார்கள்.
அந்த வகையில், ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் ஒருவர், அண்மையில் கையில் எடுத்த ஐடியா குறித்தும், இதனை வைத்து ஒரு மாதம் அவர் சம்பாதிக்கும் தொகையும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஜேக்கி போஹம் என்ற இளைஞர் ஒருவர், ஒரு மாதத்திற்கு சுமார் 28,000 யூரோக்களை (இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம்) தனது அறையில் இருந்த படியே சம்பாதிக்கிறார்.
தூக்கத்துல இருந்து எழுப்புனா போதும்..
இதற்காக அந்த இளைஞர் செய்வது எல்லாம் ஒன்றே ஒன்று தான். தனது வீட்டில் அவர் தூங்கிக் கொண்டே இருக்க, அவரை மக்கள் விரும்பும் வழியில் தன்னை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தனது அலாரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார் என்று கூறலாம்.
சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சரான போஹம், அதிக பணம் சம்பாதிக்க இந்த ஐடியாவை கையில் எடுத்துள்ளார். இதற்காக, தனது படுக்கை அறை முழுவதும் லேசர்கள், ஸ்பீக்கர்கள் என தூக்கத்தை தொந்தரவு செய்யக் கூடிய ஏராளமான பொருட்களை கொண்டு நிரப்பி வைத்துள்ளார்.
மேலும், இந்த பொருட்கள் அனைத்தையும் லைவ் ஸ்ட்ரீம் மூலம் போஹமை பின்பற்றுபவர்கள் கட்டுப்படுத்த முடியும். இதன் செயல்முறை மிகவும் எளிது. அவரை பின் தொடர்பவர்கள், போஹமை எழுப்ப வேண்டும் என நினைத்தால், இதற்காக கொஞ்சம் பணத்தை முதலில் செலுத்த வேண்டும். பின், அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுப்ப முயற்சிக்கலாம்.
இப்படி பண்ணியே பல லட்சம் சம்பாதிக்குறாரே
எப்படிபட்ட பாட்டை வேண்டுமானாலும், அங்குள்ள எரிச்சலூட்டும் மின் விளக்குகளுடன் ஒலிக்க செய்து அவரை எழுப்ப முயற்சிக்கலாம். சுமார் 5 லட்சத்திற்கும் மேல், போஹமிற்கு ஃபாலோவர்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் அவரை பின் தொடர்பவர்கள் பலரும் பணம் கொடுத்து, அவரை நடு ராத்திரி நேரங்களில் எழுப்பி வருகின்றனர். இப்படி தனது தூக்கத்தில் இருந்து எழுப்ப வைப்பதற்காக சுமார் 25 லட்சம் ரூபாய் வரை ஒரு மாதம் சம்பாதிக்கிறார்.
இதுகுறித்து பேசும் ஜேக்கி போஹம், இரவு 15 நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது ஒருவர் தொந்தரவு செய்து கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல, இரவில் சுமார் 7 மணி நேரம் இந்த லைவ் ஸ்ட்ரீம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவரை பின் தொடர்பவர்கள் மத்தியில் இந்த ஐடியா நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இரவு நேரத்தில் இப்படி தூக்கம் தொலைப்பது அவரது உடல்நலத்தை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்