கடன்ல இருந்து தப்பிக்க பெண் போட்ட திகில் பிளான்.. அடுத்தடுத்து ஏற்பட்ட ட்விஸ்ட்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாங்கிய கடனில் இருந்து தப்பிக்க இந்தோனேஷிய பெண் ஒருவர் போட்ட பிளான் தான் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

கடன்ல இருந்து தப்பிக்க பெண் போட்ட திகில் பிளான்.. அடுத்தடுத்து ஏற்பட்ட ட்விஸ்ட்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!

Also Read | 3 வருஷமா மூச்சு விடவே சிரமம்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்திட்டு டாக்டர் சொன்ன விஷயம்.. ஒரு மட்டன் பீஸ் செஞ்ச வேலை..!

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ளது மெடான் பகுதி. இங்கே வசித்து வரும் லிசா டெவி ப்ரேமிதா எனும் பெண்மணிக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாயா குணவன் எனும் பெண்மணியிடம் கணிசமான தொகை ஒன்றை கடனாக வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நவம்பர் மாத இறுதியில் பணத்தை முழுவதுமாக திரும்பி கொடுத்துவிடுவதாக லிசா சொல்லியிருக்கிறார்.

அதன்படி நவம்பரில் லிசாவை தொடர்புகொண்ட மாயாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் கடனாக வாங்கிய பணத்தை டிசம்பர் மாத துவக்கத்தில் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார் லிசா. அதனால், டிசம்பர் மாதம் தனது பணம் கிடைத்துவிடும் என நம்பியிருக்கிறார் மாயா. இந்த சூழ்நிலையில் லிசாவின் மகளுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த செய்தியை பார்த்த மாயா பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதில், லிசா இறந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்ததோடு சடலத்தின் புகைப்படமும் பகிரப்பட்டு இருந்தது.

Indonesian Woman faking her own death to avoid repay dept

இதனால் கடனாக கொடுத்த தொகை தனக்கு கிடைக்காது என நினைத்த மாயா, இதுபற்றி லிசாவின் மகளிடத்தில் விசாரித்திருக்கிறார். அப்போது, ஆச்சே எனும் நகரத்தில் தனது அம்மாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் லிசாவின் மகள் தெரிவித்திருக்கிறார். அங்குதான் மாயாவுக்கு முதல் சந்தேகம் வந்திருக்கிறது.

காரணம், லிசாவின் சொந்த ஊரான மெடான்-லிருந்து ஆச்சே 370 மைல் தொலைவில் இருக்கிறது. அங்கு ஏன் லிசாவின் இறுதிச் சடங்கு நடைபெறவேண்டும் என மாயாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஒருவேளை இது தன்னை ஏமாற்ற போடப்பட்ட திட்டமாக இருக்குமோ? என மாயா அதுகுறித்து பலரிடத்தில் விசாரிக்க துவங்கியிருக்கிறார். இதனிடையே, லிசாவின் மகளுடைய பேஸ்புக் பக்கத்தை செக் செய்த மாயாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அதில் இருந்தது லிசாவை போல இருக்கும் மற்றொரு பெண்மணியின் புகைப்படம்.

Indonesian Woman faking her own death to avoid repay dept

இதனால் அதிர்ச்சியடைந்த மாயா இதுபற்றி லிசாவின் மகளிடம் விசாரிக்க அப்போதுதான் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. வாங்கிய கடனில் இருந்து தப்பிக்க, தான் இறந்துவிட்டதாக தனது மகளின் பேஸ்புக் பக்கத்தில் அவரே பதிவை பகிர்ந்தது அம்பலமாகியுள்ளது. இதனை லிசாவின் மகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனாலும், லிசா தற்போது தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவரது மகள் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | அப்போ அது இலை இல்லையா?.. இயற்கையின் ஆச்சர்ய படைப்பு.. நெட்டிசன்களை திகைக்க வச்ச வீடியோ.!

INDONESIAN, INDONESIAN WOMAN, REPAY DEPT

மற்ற செய்திகள்