'திடீரென சிவப்பு நிறத்தில் ஓடிய மழை நீர்'... 'ஒன்றும் புரியாமல் பயந்துபோன மக்கள்'... ஆய்வுக்கு பின்னர் தெரிய வந்த உண்மை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் இருந்ததால் மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது.

'திடீரென சிவப்பு நிறத்தில் ஓடிய மழை நீர்'... 'ஒன்றும் புரியாமல் பயந்துபோன மக்கள்'... ஆய்வுக்கு பின்னர் தெரிய வந்த உண்மை!

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த அங்கு வசிக்கும் மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அந்த வெள்ளத்தை சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர். மேலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விவகாரம் அதிகாரிகள் வரை சென்றது.

இதையடுத்து அதிகாரிகள் அங்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தான் சிவப்பு நிறத்தில் மழை நீர் செல்ல என்ன காரணம் என்பது தெரியவந்தது. இந்தோனேசியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்குச் சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது.

Indonesian village gets flooded with surreal red water

இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாயத் தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன. இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களைச் சூழ்ந்து இருக்கிறது. அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தோனேசியாவில் அடிக்கடி மழை பெய்துவதும் இயல்பான ஒன்று.

Indonesian village gets flooded with surreal red water

சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர். அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தோனேசியாவில் ஒரு விமான விபத்து ஏற்பட்டது. எரிமலை வெடிப்பும் ஏற்பட்டது. இப்போது மீண்டும் மழை பெய்து ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மற்ற செய்திகள்