'தண்ணீரில் மிதந்த கிழிந்த ஜீன்ஸ், இரும்பு துண்டுகள்...' 'மீனவர் அளித்த தகவல்...' - மாயமான விமானம் குறித்த அதிர்சிகர தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியா தலைநகரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்டு புறப்பட்ட விமானம் விபத்துக்கு உள்ளாகி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்டு ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 என்ற ரகத்தை சேர்ந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ளன. தற்போது இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர்.
இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து அந்நாட்டு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி, 'ஜகார்த்தா வடக்குப் பகுதியில் உள்ள கடலில் விமானத்தின் சில பாகங்கள் இருப்பதாக மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று இந்த பாகங்கள் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தண்ணீரிலிருந்து கிழிந்த ஜீன்ஸ், இரும்பு பாகங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்