"உங்க bag -அ செக் பண்ணனும்".. ஏர்போர்ட்ல சிக்குன 2 பெண்கள்.. உள்ள இருந்ததை உயிரினங்களை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு 109 உயிரினங்களை கடத்த முயன்ற இரண்டு பெண்களை விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

"உங்க bag -அ செக் பண்ணனும்".. ஏர்போர்ட்ல சிக்குன 2 பெண்கள்.. உள்ள இருந்ததை உயிரினங்களை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்..!

Also Read | நேத்து மகனுக்கு... இன்னைக்கு மகளுக்கு.. வாரிசுகளுக்கு முக்கிய பதவியை அளித்த முகேஷ் அம்பானி..!

சமீப காலங்களில் அரிய வன விலங்குகளை கடத்தும் சதி வேலையில் ஈடுட்டு வரும் கும்பல்கள் அதிகளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட இடங்களில்  மட்டுமே வசிக்கும் அரிய விலங்குகளை கள்ள சந்தையில் விற்க, முயலும் கும்பல்கள் அவ்வப்போது விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இந்தியாவை சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிசோதனை

பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக கையில் பைகளுடன் காணப்பட்ட இரண்டு பெண்களை அதிகாரிகள் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது அவர்கள் எடுத்துவந்திருந்த பைகள் அனைத்தும் எக்ஸ்ரே இயந்திரம் மூலமாக சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில், கண்ட காட்சி அதிகாரிகளை திகைப்படைய செய்திருக்கிறது.

Indian Women With 109 Live Animals In Their Luggage Arrested

இரண்டு பெண்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பைகளில் பாம்புகள், பல்லிகள், ஆமைகள் உள்ளிட்ட விலங்குகள் இருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விமான நிலையத்திற்கு விரைந்துவந்த போலீசார் இரு பெண்களையும் கைது செய்தனர். இதுகுறித்து தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள், வனவிலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில்,"இரண்டு சூட்கேஸ்களிலும் இரண்டு வெள்ளை முள்ளம்பன்றிகள், இரண்டு அர்மாடில்லோக்கள், 35 ஆமைகள், 50 பல்லிகள் மற்றும் 20 பாம்புகள் இருந்தன. இவை எக்ஸ்ரே ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகார்

காவல்துறையினர் நடத்திய ஆய்வில் கைதானவர்கள் நித்யா ராஜா மற்றும் ஜாகியா சுல்தானா இப்ராஹிம் என்பதும் அவர்கள் சென்னைக்கு இந்த உயிரினங்கள் கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்திருக்கிறது. இருவரின் மீதும் 2019 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 2015 ஆம் ஆண்டின் விலங்கு நோய்ச் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டம் ஆகியவற்றை மீறியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாய்லாந்து விமான நிலையத்தில் 109 உயிரினங்களை கடந்த முயன்ற இரண்டு இந்திய பெண்கள் கைதான சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | நிலவுக்கு அனுப்பப்படும் நியூக்ளியர் ரியாக்டர்.. நாசா போட்ட ஸ்கெட்ச் இதுக்குத்தானா?

INDIAN WOMAN, LIVE ANIMALS, LUGGAGE, ARREST

மற்ற செய்திகள்