Valimai BNS

Russia-Ukraine Crisis: "பிரதமர் ஐயா.. காப்பாத்துங்க".. கவலையில் 500 பேரும் பதுங்கி இருக்கோம்"..‌ இந்திய மாணவர்களின் கலங்க வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகமே இப்போது ரஷியா - உக்ரைன் போர் குறித்த நடவடிக்கைகளை அச்சத்துடன் கவனித்து வருகிறது. நவீன காலத்தில் மிகப்பெரிய போராக கருதப்படும் இதனை தற்போது துவங்கி பிள்ளையார் சுழி போட்டு வைத்திருக்கிறது ரஷ்யா. நேற்று, உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. உக்ரைனில் போர் துவங்கி இருப்பதை ஐ.நா.,வுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கில்சிஸ்டியா உறுதி செய்திருந்தார்.

Russia-Ukraine Crisis: "பிரதமர் ஐயா.. காப்பாத்துங்க".. கவலையில் 500 பேரும் பதுங்கி இருக்கோம்"..‌ இந்திய மாணவர்களின் கலங்க வைக்கும் வீடியோ..!

தங்கம் வாங்க சரியான நேரம்.. சவரனுக்கு 1200 ரூபாய் சரிவு..!

இதனையடுத்து மக்கள் தங்களது வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லத் துவங்கியுள்ளனர். நாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்களது தூதரை திரும்பப் பெற்றுள்ளன. உக்ரைன் வானில் போர்மேகம் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களின் நிலை என்ன? என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது.

உக்ரைனில் இந்திய மாணவர்கள்

மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக உக்ரைனில்  வசித்துவரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 18,000 ஆயிரம் ஆகும். அதுமட்டுமல்லாமல் அலுவல் ரீதியாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கே வசித்து வருகின்றனர்.

இவர்களை மீட்கும் முயற்சியாக மீட்பு விமானங்களை இந்திய அரசு இயக்கி வருகிறது. இருப்பினும் உக்ரைனில் தற்போது சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்கும் படி உக்ரேனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து வருகிறது.

Indian students Shelter in the basement of a University in Kharkiv

இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில் சுமார் 500 இந்திய மாணவர்கள் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களில் உணவு, தண்ணீர் தீர்ந்து போய்விடும் எனவும் இந்திய பிரதமர் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் அந்த மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து இம்ரான் சோலங்கி என்பவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்," கார்கிவ் பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில் இந்திய மாணவர்கள் பதுங்கி உள்ளனர். பணம், உணவு மற்றும் தண்ணீர் காலியாகி வருவதால் அவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 18,000 மாணவர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கியுள்ளனர். மோடி அவர்கள் உதவ வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன், பல்கலைக்கழக பேஸ்மெண்டில் மாணவர்கள் தங்கி இருக்கும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமுக வலை தளங்களில் வைரலாகி பரவிவருகிறது.

 

"கேக்க மாட்டீங்க".. மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் பொசுக்கிய ஆசிரியர்.. காட்டுத்தீயாக பரவும் வீடியோ..!

 

INDIAN STUDENTS, UNIVERSITY, RUSSIA-UKRAINE CRISIS, ரஷியா - உக்ரைன் போர், இந்திய மாணவர்கள்

மற்ற செய்திகள்