Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

"2 நாள் தூக்கம் போச்சு".. 14 வருசமா துபாயில் வேலை.. இந்தியருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த அதிர்ஷ்டம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் மேம்பாட்டிற்காகவும் பலரும் வெளிநாடுகளில் சென்று பல ஆண்டுகள் உழைத்து தங்களின் குடும்பம் முன்னேற பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.

"2 நாள் தூக்கம் போச்சு".. 14 வருசமா துபாயில் வேலை.. இந்தியருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த அதிர்ஷ்டம்!!

அப்படி வெளிநாட்டிற்கு சென்று கடினமாக உழைத்து வருபவர்கள், தங்களின் சொந்த ஊரில் மிக சில நாட்களை தான் செலவிட முடியும்.

இப்படி பல தியாகங்கள் செய்து, கஷ்டப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஷாநவாஸ் என்ற நபருக்கு துபாயில் அடித்துள்ள அதிர்ஷ்டம், தற்போது அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ். இவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வேலை பார்த்து வருகிறார்.

ஷாநவாஸுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில், இரண்டு குழந்தைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் துபாயில் உள்ள கார் வாடகை விடும் நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிந்து வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, துபாயில் உள்ள லாட்டரி நிறுவனம் ஒன்றில் இருந்து, தொடர்ந்து லாட்டரி வாங்கி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ஷாநவாஸ்.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஷாநவாஸ் தேர்வு செய்துள்ள எண்களுக்கு, அந்த லாட்டரி நிறுவனத்தில், 10 மில்லியன் திர்ஹாம்கள் பரிசாக அடித்துள்ளது. ஷாநவாஸுடன் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும், ஒரே எண்களை பொருத்தியதால், அவர்கள் இருவருக்கும் இந்த 10 மில்லியன் திர்ஹாம்களை தலா 5 மில்லியன் திர்ஹாம்களாக பிரித்து கொடுத்துள்ளனர். இது இந்திய மதிப்பில், சுமார் 10 கோடி ரூபாய் ஆகும்.

இது தொடர்பாக பேசும் ஷாநவாஸ், "ஆரம்பத்தில் நான் இதனை நம்பவில்லை. எனக்கு மெயில் வந்த பிறகு தான், நான் உறுதியானது என முடிவு செய்தேன். வெற்றி பெற்ற உற்சாகம் இன்னும் மாறவில்லை. இதனை அறிந்த பிறகு, இரண்டு நாட்கள் என்னால் தூங்கவே முடியவில்லை. இதில் வென்ற பணத்தைக் கொண்டு எனது கடனை முதலில் நான் அடைப்பேன். தொடர்ந்து, இந்தியாவை விட ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக முதலீடு செய்ய விரும்புகிறேன்" என ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

பெரிய அளவில் பணம் ஜெயித்தாலும், தொடர்ந்து துபாயில் வேலை செய்யவும் ஷாநவாஸ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளாக, மெல்ல மெல்ல பணம் சேர்த்து வந்த இந்தியரான ஷாநவாஸ் வாழ்க்கை, ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் மூலம் அப்படியே தலை கீழாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

DUBAI, INDIAN, LOTTERY

மற்ற செய்திகள்