பாவாடையில் தெறி நடனம்.. நியூயார்க் நகரத்தை அலறவிட்ட இந்திய இளைஞர்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூயார்க் நகர வீதிகளில் இந்திய இளைஞர் பாவாடை அணிந்து நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாவாடையில் தெறி நடனம்.. நியூயார்க் நகரத்தை அலறவிட்ட இந்திய இளைஞர்.. வைரல் வீடியோ..!

நடனம்

இந்தியாவை சேர்ந்தவர் ஜைனில் மேத்தா. இவர் தன்னுடைய 5 வது வயதில் இருந்து நடனம் மீது அளவில்லா காதல் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்," நான் என்னுடைய சிறிய வயதில் சமையலறையில் நடனம் ஆடினேன். அதன் பிறகு எங்களுடைய லிவிங் ரூமையே என்னுடைய நடன மேடையாக மாற்றிக்கொண்டேன். அப்போதுதான் நடனம் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும் காதலையும் புரிந்துகொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Indian Man in skirt dances on New York streets

லெஹங்கா

பாலிவுட் படங்களை பார்த்த பின்னர் தனக்கு லெஹங்கா அணியும் ஆசை வந்ததாக கூறும் மேத்தா," ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் நடிகைகள் லெஹங்காவுடன் நடனமாடுகையில் அது மிக அழகாக தோன்றியது. நான் என்னுடைய அம்மாவின் லெஹங்காவை அணிந்து வீட்டிற்குள் நடனமாடினேன். என்னுடைய பெற்றோரும் உனக்கு பிடித்ததை மகிழ்ச்சியோடு செய் என உறுதுணையாக இருந்தனர். எனக்கு லெஹங்கா மிகவும் பிடித்துப்போய்விட்டது" என்கிறார்.

நியூயார்க்

இந்நிலையில் தனது வீட்டிற்குள்ளேயே நடனமாடி மகிழ்ந்த மேத்தா, தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்த முடிவெடுத்திருக்கிறார். இதனை அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் லெஹங்காவுடன் நடனமாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார் மேத்தா. அண்மையில் வெளிவந்த கங்குபாய் கத்தியவாடி படத்தில் வரும் ஜுமே ரே கோரி (Jhume Re Gori) பாடலுக்குத்தான் மேத்தா நடனமாடியிருக்கிறார்.

Indian Man in skirt dances on New York streets

இந்த வீடியோ இதுவரையில் 17 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இதனை 7.9 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். தனக்கு பிடித்ததை செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் மேத்தா எடுத்த இந்த முடிவை பலரும் சமூக வலை தளங்களில் பாராட்டியும் அவரை உற்சாகப்படுத்தியும் வருகின்றனர்.

நியூயார்க் நகரத்தில் இந்திய இளைஞர் ஜைனில் மேத்தா நடனமாடும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

DANCE, NEWYORK, GANGUBAIKATHIAWADI, LEHENGA, நடனம், நியூயார்க், லெஹங்கா, கங்குபாய்கத்தியவாடி

மற்ற செய்திகள்