'அவர் ஒரு சைக்கோ'...'கதறி துடித்த பெண்'...நெஞ்சை உலுக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கணவன் தாக்கியதில் கண்ணில் ரத்தம் வழிய ட்விட்டரில் வீடியோ போட்டு உதவி கேட்ட பெண்ணின் வீடியோ காண்போரை பதற செய்துள்ளது.

'அவர் ஒரு சைக்கோ'...'கதறி துடித்த பெண்'...நெஞ்சை உலுக்கும் வீடியோ!

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் சுல்தான். திருமணமான இவர், கணவர் முகமது கைஸாருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சார்ஜாவில் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள். இந்தநிலையில் ஜாஸ்மின், நேற்று முன் தினம் இரவு, ஒரு கண்ணில் ரத்தம் வடிந்த நிலையில், ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். காண்போரை பதற செய்யும் அந்த வீடியோவில், கண்ணீர் விட்டு கதறியபடி உதவி கேட்டார்.

அந்த வீடியோவில், 'நான் சார்ஜாவில் வசிக்கிறேன். எனது கணவர் சைக்கோவை போன்று தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். இப்போது கூட என்னை அவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதற்கு மேல் என்னால் பொறுத்து கொள்ள முடியாது. தயவுசெய்து எனக்கு உதவுங்கள். எனது முகவரி இதுதான்'' என அந்த வீடியோவில் ஜாஸ்மின் உதவி கேட்டிருந்தார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்த நிலையில், அது சார்ஜா காவல்துறையின் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், உடனடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற விசாரணையில், ''தனது பாஸ்போர்ட், நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கணவர் பிடுங்கி வைத்துக்கொண்டு தினமும் அடித்து துன்புறுத்துவதாகக் கூறினார்''. இதனைத்தொடர்ந்து ஜாஸ்மினின் கணவர் முகமது கைஸாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே சார்ஜாவில் தனக்கு உறவுக்காரர்கள் யாரும் இல்லாத நிலையில், தன்னை தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஜாஸ்மின் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறையினர் எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஜாஸ்மின் உதவி கேட்டு அழும் வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

TWITTER, SHARJAH, INDIAN EXPAT, SHARJAH POLICE, SOCIAL MEDIA, INDIAN WOMAN