"தயவு செஞ்சு திரும்பி வந்திருங்க"!.. ஆப்கானிஸ்தானில் உக்கிரமாகும் வன்முறை வெறியாட்டம்!.. அவசர அவசரமாக வெளியேற்றப்படும் இந்தியர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானின் பால்க் மற்றும் தகார் பகுதிகளில் தாலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

"தயவு செஞ்சு திரும்பி வந்திருங்க"!.. ஆப்கானிஸ்தானில் உக்கிரமாகும் வன்முறை வெறியாட்டம்!.. அவசர அவசரமாக வெளியேற்றப்படும் இந்தியர்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வருவதால், அங்கே பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில், அவர்கள் தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஆப்கானிஸ்தானின் 4வது பெரிய நகரமான, மத்திய ஆசிய நாடுகளின் எல்லையான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-e-Sharif) உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்தியா விரைவில் தனது ராஜிய அதிகாரிகளை தாயகம் அழைத்து வருகிறது.

மேலும், அங்குள்ள இந்திய குடிமக்களை, தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் (Afghanistan) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 1500 இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்