"இந்த கொரோனா நேரத்துலயும், நெஞ்சுல பாலை வார்த்துட்டாங்க!"... 22 பில்லியன் டாலர் முதலீட்டில் அசத்திய 155 இந்திய நிறுவனங்கள்! .. நெகிழ்ந்துபோன அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 22 பில்லியன் டாலர் முதலீட்டில் 155 இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளதாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில்தான் 155 இந்திய நிறுவனங்கள் 50 மாநிலங்களில், கொலம்பியா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 25 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இந்த 155 நிறுவனங்களின் நிச்சயமான முதலீடுகளின் மொத்த மதிப்பு 22 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாகவும் சிஐஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, இந்திய நிறுவனங்கள் அதிகபட்ச வேலைவாய்ப்பை ஈட்டிய முதல் ஐந்து மாகாணங்களாக டெக்சாஸ் (17,578 வேலைகள்), கலிபோர்னியா (8,271 வேலைகள்), நியூ ஜெர்சி (8,057 வேலைகள்), நியூயார்க் (6,175 வேலைகள்) மற்றும் புளோரிடா (5,454 வேலைகள்) ஆகியவை உள்ளன. இதேபோல் இந்திய நிறுவனங்கள் அதிக வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்கிய முதல் ஐந்து நகரங்களாக டெக்சாஸ் (9.5 பில்லியன் டாலர்), நியூ ஜெர்சி (2.4 பில்லியன் டாலர்), நியூயார்க் (1.8 பில்லியன் டாலர்), புளோரிடா (15 915 மில்லியன்) மற்றும் மாசசூசெட்ஸ் (873 மில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன.
அதே சமயம், 20 அமெரிக்க மாகாணங்களில் இந்திய முதலீடுகள் தலா 100 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகக் கூறியுள்ள சிஐஐ அறிக்கை, 77 சதவீத நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிக முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 83 சதவீத நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
உலகமும், இந்தியாவும் அமெரிக்காவும் கொரோனா வைரஸை எதிர்கொண்டிருக்கும் இந்நேரத்தில், "அமெரிக்க இந்தியர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்குவதற்கு இந்த தருணத்தை நாம் அர்ப்பணிக்க வேண்டும்" என்று செனட் இந்தியா காகஸின் இணை நிறுவனர் செனட்டர் மார்க் வார்னர் கூறினார். அதோடு, "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கு நாம் நம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
மற்ற செய்திகள்