ஒட்டுமொத்த 'இந்தியர்'களையும் பெருமைப்பட வைத்த '15' வயது 'சிறுமி'... 'அமெரிக்கா'வில் கிடைத்த மிகப்பெரிய 'கவுரவம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஆண்டு தோறும் சிறப்பித்து வருகிறது.

ஒட்டுமொத்த 'இந்தியர்'களையும் பெருமைப்பட வைத்த '15' வயது 'சிறுமி'... 'அமெரிக்கா'வில் கிடைத்த மிகப்பெரிய 'கவுரவம்'!!!

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களின் விவரங்களை டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி என அறியப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி கீதாஞ்சலி ராவுக்கு 'Kid of the year' என்ற பட்டத்தை வழங்கி டைம் பத்திரிக்கை கவுரவித்துள்ளது.

அது மட்டுமில்லாமல், டைம் இதழ் தங்களது அட்டைப்படத்திலும் சிறுமியின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளனர். 'Kid of the year' என்ற பட்டத்தை இந்தாண்டு முதல் டைம் பத்திரிக்கை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதனை முதல் முறையாக கீதாஞ்சலி வென்றுள்ளார்.

இணையதளங்களில் பயனாளிகளுக்கு எதிராக வரும் துன்புறுத்தல்களை (cyber bullying) கண்டறியும் செயலி, தண்ணீரின் சுத்தத்தை அறிந்து கொள்ளும் வகையிலான செயலி ஆகியவற்றை சிறுமி கீதாஞ்சலி கண்டுபிடித்துள்ளார். டைம் இதழின் இந்த கவுரவத்திற்காக சுமார் 5,000 பேர் வரை பரிசீலிக்கப்பட்டிருந்த நிலையில், கீதாஞ்சலி அந்த பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்