'நாங்க ஜெயிச்சிட்டோம்'... 'மாஸாக அறிவித்த நாசா'...'ஆனா சைலண்டா பின்னணியில் இருக்கும் இந்தியர்'... யார் இந்த சுவேதா மோகன்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செவ்வாய்க் கிரகத்தில் நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.

'நாங்க ஜெயிச்சிட்டோம்'... 'மாஸாக அறிவித்த நாசா'...'ஆனா சைலண்டா பின்னணியில் இருக்கும் இந்தியர்'... யார் இந்த சுவேதா மோகன்?

செவ்வாய்க் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தைச் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களைப் பூமிக்குத் திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது. அது இரண்டு ஆண்டுகள் அங்குச் சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வெற்றியை நாசா பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவேதா மோகனுக்கு மிகப் பெரிய பங்கிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

Indian-American scientist who led charge to land Nasa rover on Mars

கடந்த 2013ம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே சுவாதி இந்த திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார். மேலும் ரோவர் வாகனம், செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார்.

Indian-American scientist who led charge to land Nasa rover on Mars

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், ஒன்றாவது வயதில் அமெரிக்கா சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்த அவருக்கு, 'ஸ்டார் டிரெக்' டிவி நிகழ்ச்சியைப் பார்த்ததால் புதிய உலகங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயணத் திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்