"சீனாவை முந்திட்டோமா...?" "என்ன சார் சொல்றிங்க..." "எதுல முந்திட்டோம்...?"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, சீனாவை முந்தி 11 இடத்திற்கு சென்றுள்ளது.

"சீனாவை முந்திட்டோமா...?" "என்ன சார் சொல்றிங்க..." "எதுல முந்திட்டோம்...?"

சீனாவின் வுகான் நகரில் தோன்றி பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்தியாவில் ஆரம்பத்தில் மிதமாக பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது வேகமெடுத்துள்ளது. மஹாராஷ்ட்ரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காட்டுத் தீ போல வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, உயிர்பலியையும் தடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் பலியாகி உள்ளனர்.

அதே சமயம், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை மே 17ம் தேதிக்கும் பின், 4வது முறையாகவும் நீட்டிக்க உள்ளது. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்பலியும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது.இதனையடுத்து கொரோனா பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்பு பட்டியலில் 11வது இடத்தை பிடித்தது.

உலகில் இதுவரை 213 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசுக்கு, 45.80 லட்சத்துக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.