'அமெரிக்காவ மட்டும் சொல்றீங்க'... 'இந்தியா, சீனாவுல இத பண்ணுங்க, அப்ப தெரியும்'... டிரம்ப் அதிரடி!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,36,657 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு அதிக அளவில் பரிசோதனை செய்வதால் தான் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ''அமெரிக்கா 2 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளைச் செய்துள்ளது. இது தான் பாதிப்பு அதிகமாகத் தெரிய முக்கிய காரணம் ஆகும். சீனாவிலும், இந்தியாவிலும் பரிசோதனைகளை அதிகரித்தால், அங்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
சீனா தான் விரோதி, அங்கிருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவர்கள் கட்டுப்படுத்த தவறி விட்டார்கள்'' எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இதற்கிடையே மத்திய அரசு தகவலின் படி இந்தியாவில் 40 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்