'ஃபைனல்ஸ்க்கு வர்ற டீம் எது?' .. 'அது பேஸ்பாலா? கிரிக்கெட்டா?'.. அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு!
முகப்பு > செய்திகள் > உலகம்தீவிர கிரிக்கெட் ரசிகரான சுந்தர் பிச்சை நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஃபைனலுக்கு வரப்போவது எந்த அணி என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
கவாஸ்கர் மற்றும் சச்சினுக்கு ரசிகரென பல மேடைகளில் கூறியிருக்கும் கூகுளின் முதன்மை செயலாளர் சுந்தர் பிச்சை வாஷிங்டனில் நடந்த அமெரிக்க- இந்திய வணிக கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசும்போது, நடப்பு உலகக் கோப்பை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான தனது பதிலைத் தெரிவித்தார்.
இதில், ‘இந்த உலகக்கோப்பை ஃபைனலுக்கு வரவிருக்கும் அணிகள் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, இத உலகக் கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஃபைனலுக்கு வரும் என்று தனக்குத் தோன்றுவதாகவும், இம்முறை இந்தியா சிறப்பாக செயல்படும் என்றும் கூறினார்.
அதே சமயம், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளும் வலுவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட சுந்தர் பிச்சை, அமெரிக்கா சென்ற புதிதில் பேஸ்பால் விளையாட முயற்சித்து அதில் கிரிக்கெட் போலவே ஆடி டொக்கு வாங்கியதை சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில், ரன் எடுக்கும்போது பேட்டை உடன் கொண்டு செல்வது, திரும்பி ஒரு ஷாட் அடிப்பது போன்ற கிரிக்கெட் விதிமுறைகளை பேஸ்பால் கையாண்டதாகவும் பிறகு அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு சரியாக ஆடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.