'பூனை, நாய் கறி விற்கத் தடை...' 'லேட்டாக' விழித்துக் கொண்ட 'சீன நகரம்...' 'கொரோனா' கற்றுக் கொடுத்த 'பாடம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக சீனாவில் சென்ஜென்  என்ற நகரில் முதல் முறையாக செல்லப்பிராணிகளான பூனை, நாய் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

'பூனை, நாய் கறி விற்கத் தடை...' 'லேட்டாக' விழித்துக் கொண்ட 'சீன நகரம்...' 'கொரோனா' கற்றுக் கொடுத்த 'பாடம்'...

சீனாவில் கண்ணில் படும் உயிரினங்கள் அனைத்தையும் உண்ணும் பழக்கம் இருப்பதால் தான்  கொரோனா போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டை பல்வேறு நாடுகளும் குறைகூறி வந்தன.

இதுபோன்ற உயிரினங்களை சாப்பிடுவதால் அவற்றின் உடலில் உள்ள வைரஸ்கள் மாற்றம் பெற்று மனிதர்களை தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை உட்கொள்வதை சீன அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில் சீனாவில் சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் சென்ஜென் என்ற நகரில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் இறைச்சியை விற்பனை செய்யவும் சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வருடாந்திர யூலின் நாய் இறைச்சி திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்புகள், தவளை மற்றும் ஆமை இறைச்சி ஆகியவற்றை சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் எந்த இறைச்சியை சாப்பிட வேண்டும் என்றும் இச்சட்டம் மூலம் சென்ஜென் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 9 வகையான இறைச்சிகளை சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை பன்றிகள், மாட்டிறைச்சி, செம்மறி ஆடு, கழுதை, முயல், கோழி, வாத்து, புறா மற்றும் மீன் உணவுகள் உள்ளிட்டவைற்றை இறைச்சியாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடை செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் அதன் தயாரிப்புப் பொருட்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சந்தை கண்காணிப்புத்துறை மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சென்ஜென் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CORONA, CHINA, SHENZHEN, CITY, DOG, SNAKE, CAT, MEAT, BAN