‘இந்தியா இதெல்லாத்தையும் மோட்டிவேட் பண்ணுது’... ‘அதற்கான எவிடென்ஸ் எங்ககிட்ட இருக்கு’... ‘மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத ஊக்குவிப்பில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என அந்நாடு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

‘இந்தியா இதெல்லாத்தையும் மோட்டிவேட் பண்ணுது’... ‘அதற்கான எவிடென்ஸ் எங்ககிட்ட இருக்கு’... ‘மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்’...!!!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ராணுவச் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் நேற்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில் ‘எங்கள் நாட்டில் சமீபத்தில் நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்திய உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  அவை பாகிஸ்தானிய எல்லை பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளன.

In New Diplomatic Tactic, Pakistan Claims Evidence of India’s 'Terror'

பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத ஊக்குவிப்புக்காக இந்திய நிலம் பயன்பட அந்நாடு அனுமதிக்கிறது.  அண்டை நாடுகளில் இருந்து இந்தியா தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. அதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்களை நாங்கள் சர்வதேச அளவிலும் தேசத்தின் முன்பும் வெளிப்படுத்துவோம்.

இந்தியாவின் உளவுப்பிரிவுக்கும், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளான ஜமாத் அல் அஹ்ரர், தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான், பலூச் விடுதலை ராணுவம், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகியவற்றோடு தொடர்பு இருக்கிறது. பாகிஸ்தான், சீனா இடையே 6000 கோடி டாலர் செலவில் அமைக்கப்பட உள்ள பொருளாதாரக் கட்டமைப்புத் திட்டத்தை குலைக்க இந்தியா முயல்கிறது’ எனக் குற்றம்சாட்டினர்.

In New Diplomatic Tactic, Pakistan Claims Evidence of India’s 'Terror'

காஷ்மீர் எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி மக்கள் 6 பேரும், ராணுவத்தினர் 5 பேரும் கொல்லப்பட்டனர். இந்தியா அளித்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தநிலையில், பாகிஸ்தான் இந்த குற்றஞ்சாட்டை கூறியுள்ளது.

மற்ற செய்திகள்