"ஒருவேளை என்னை கொலை செஞ்சுட்டா.. நீங்க இதை செய்யணும்".. வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்.. இம்ரான் கான் வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய போலீசார் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஒருவேளை என்னை கொலை செஞ்சுட்டா.. நீங்க இதை செய்யணும்".. வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்.. இம்ரான் கான் வெளியிட்ட வீடியோ..!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஒரு நல்ல நண்பனா எனக்காக அதை செஞ்சிருக்காரு".. விக்ரமனை நெகிழ வச்ச ADK..!

இம்ரான் கான்

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்தன. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருந்த நிலையில் கடந்த ஏப்ரலில் பதவி விலகினார் இம்ரான் கான். இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளும் ஷெபாஸ் ஷெரீப் -ன் கட்சி சுமத்திவந்தது.

வழக்கு பதிவு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தோஷகானா வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை என குற்றம்சாட்டி பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது நீதிமன்றம். இதனிடையே இன்று அதிகாலை இம்ரான் கானின் லாகூர் இல்லத்துக்கு வெளியே போலீசார் முற்றுகையிட்டனர்.

Imran Khan video message as police reaches his Lahore residence

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த நிலையில், இம்ரான் கான் வீடியோ ஒன்றினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிந்துள்ளார். அதில், ஒருவேளை தான் கைது செய்யப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ மக்கள் போராடுவதை நிறுத்த கூடாது என பேசியிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில்,"எனக்கு ஏதாவது நடந்தால், நான் சிறைக்கு அனுப்பப்பட்டால் அல்லது நான் கொல்லப்பட்டால், நீங்கள் இம்ரான் கான் இல்லாமல் போராடுவீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். ஒருபோதும் மக்கள் அடிமைத்தனத்தை ஆதரிக்க கூடாது" என தெரிவித்திருக்கிறார்.

Imran Khan video message as police reaches his Lahore residence

Images are subject to © copyright to their respective owners.

இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் திங்களன்று கான் தோஷகானா வழக்கில் விசாரணையைத் தவிர்த்துவிட்டதால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. மார்ச் 18ஆம் தேதிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இம்ரான் கான் வீட்டிற்கு வெளியே காவல்துறையினர் வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, கானின் இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read | போடு.. சினிமாவில் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

IMRAN KHAN, IMRAN KHAN VIDEO MESSAGE, POLICE, LAHORE RESIDENCE

மற்ற செய்திகள்