தாலிபான்களோட 'பேசினாரா' இம்ரான்கான்...? 'அது' நடந்துச்சுன்னா மட்டும் தான்... - இந்த பிரச்சனைக்கு ஒரு 'முடிவு' கிடைக்கும்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தாக்குதல் முற்றுப்பெற வேண்டும் என்றால் அதிபர் அஷ்ரப் கானி பதவி விட்டு விலக வேண்டும் என தாலிபான் படையினர் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தாலிபான்களோட 'பேசினாரா' இம்ரான்கான்...? 'அது' நடந்துச்சுன்னா மட்டும் தான்... - இந்த பிரச்சனைக்கு ஒரு 'முடிவு' கிடைக்கும்...!

ஆப்கானில் ராணுவத்திற்கும், தாலிபான் தீவிரவாத படையினருக்கும் பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது. தற்போது தீவிர நிலையில் இருக்கும் இந்த போரில் ஆப்கானில் 60% பகுதியை தாலிபான் படையினர் கைப்பற்றி விட்டனர்.

Imran Khan Taliban forces resignation Ashraf Ghani

இந்நிலையில் ஆப்கான் அரசிற்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்க அரசு தங்கள் படை ஆப்கானில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன் தாலிபானுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வந்தநிலையில், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்  தாலிபானின் கோரிக்கையை வெளிப்படையாக கூறியுள்ளார்.

Imran Khan Taliban forces resignation Ashraf Ghani

இதுகுறித்து கூறிய அவர், 'மூன்று மாதங்களுக்கு முன் தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்த நான் முயன்றேன். அப்போது பேச்சுவார்த்தையின் முடிவில் ஆப்கானிஸ்தானின் அதிபராக அஷ்ரப் கனி தொடரும்வரை அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்தமாட்டார் என கூறினர்' என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்