'எல்லாத்துக்கும் காரணம்...' 'டிரஸ் கம்மியா போடுறது தான்...' 'பாகிஸ்தான் பிரதமர் கூறிய சர்ச்சை கருத்து...' - வலுக்கும் கண்டனங்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த ஜூன்-20 அன்று எச்.பி.ஓவில்  ஒளிபரப்பப்பட்ட ஆக்ஸியோஸின் பத்திரிகையாளர் ஜொனாதன் ஸ்வானுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பெண்கள் ஆடை, ஆண்களின் எண்ணம், இந்திய  புலனாய்வு அமைப்பு மற்றும் சீனா குறித்து பேட்டியளித்துள்ளார்.

'எல்லாத்துக்கும் காரணம்...' 'டிரஸ் கம்மியா போடுறது தான்...' 'பாகிஸ்தான் பிரதமர் கூறிய சர்ச்சை கருத்து...' - வலுக்கும் கண்டனங்கள்...!

அப்பேட்டியில், 'ஒரு பெண் அரை குறை  ஆடைகளை அணிந்தால் அது ஆணின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இஸ்லாத்தில் இதற்கு தீர்வாக பர்தா இருக்கும். அதோடு, எங்களிடம் டிஸ்கோத்தேக்குகள் இல்லை, எங்களிடம் நைட் கிளப்புகள் இல்லை, எனவே இங்கே வேறுபட்ட வாழ்க்கை முறை உள்ளது' எனக் கூறினார்.

அதன்பின், ஒரு பெண்ணின் உடைகள் பாலியல் வன்முறையைத் தூண்ட முடியுமா என ஸ்வான் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இம்ரான் கான், 'இந்த கேள்விக்கான பதில் நீங்கள் வாழும் சமுதாயத்தைப் பொறுத்தது. ஒரு சமூகத்தில் நான் மேற்கூறிய விஷயங்களைக் காணவில்லை என்றால், அது அவர்களுக்கு கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களைப் போன்ற ஒரு சமூகத்தில், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது' என பதிலளித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் படி அங்கு ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற 22,000 வழக்குகள் போலீசில் பதிவாகியுள்ளன.

தெற்காசியாவின் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின்  சட்ட ஆலோசகர் ரீமா ஓமர் இம்ரான் கானின் இந்த பேட்டிக்கு தன் ட்விட்டர் பக்கத்தில், 'பாகிஸ்தானில் பாலியல் வன்முறைக்கான காரணங்கள் தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் பாதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் பழிபோடுவது  ஏமாற்றமளிக்கிறது மற்றும் வெளிப்படையாக வருத்தமளிக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்