"சொல்ல சொல்ல கேக்காம இத பண்றீங்க!...கொரோனா 2வது ரவுண்டு வந்து ஒரு காட்டு காட்டப்போகுது பாருங்க"! - 'எச்சரித்த உலக சுகாதார மையம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா எனப்படும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல நாடுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவரும் நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதால் பொது முடக்க அமலாக்கத்தை வேகமாக பல நாடுகள் தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்ப முடிவு செய்துள்ளன. எனினும் இந்த லாக்டவுன் விலகலானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

"சொல்ல சொல்ல கேக்காம இத பண்றீங்க!...கொரோனா 2வது ரவுண்டு வந்து ஒரு காட்டு காட்டப்போகுது பாருங்க"! - 'எச்சரித்த உலக சுகாதார மையம்'!

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால மருத்துவரான மைக் ரேயன் பேசும்போது,  “கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு சில நாடுகளில் குறைந்து வருகிறது என்றாலும் தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் நோய் பாதிப்பு அதிகமாகி கொண்டே போகிறது. இத்தனை நாட்களில் கொரோனா நமக்குச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போன முக்கியமான பாடமே, எப்போது வேண்டுமானாலும் இந்த வைரஸ் பரவும் என்பதுதான்.

அந்த அடிப்படையில், இந்த வைரஸ் பரவுகிறது என்பதுகூட நமக்கு தெரியாமல், மீண்டும் ‘பொதுமுடக்கத்தைத் தளர்த்தி முழு விலகலை’ அமல்படுத்துவது ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவே உள்ளது. கொரானாவின் தன்மையை அறிவது இப்போதைக்கு அறிவியலாளர்களுக்கே சவாலாக உள்ள நிலையில் உலகம் முழுதும் நோய் குறைய தொடங்கிய பிறகே, பொதுமுடக்க விலகல் சரியானதாக இருக்க முடியும். இல்லையேல் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க இந்த பொதுமுடக்க விலகல் வழிவகுத்துவிடும். அந்தவகையில் நோய் பாதிப்பு குறைந்ததாக சொல்லிக்கொள்ளும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள் தங்களின் நாடுகளில் கொரோனா பரிசோதனையை, அதிகரிக்க வேண்டும். பொது முடக்கத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொதுமுடக்க விலகலை அல்ல.!” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, பொது முடக்க விலகலை கொரோனா நோய்த்தொற்று குறைவதற்குள் அமல்படுத்தினால்  கொரோனா தாக்குதலின் இரண்டாவது அலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பெரிதாக உருவாகலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்