இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, கூடுதல் அமர்வுக்கு மாற்றக்கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்விலேயே விசாரணை தொடரும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

2. பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவதாக பதிவிட்ட டுவிட்டர் பதிவையடுத்து,  'NoSir' என பதிவிட்டு வருகின்றனர். இதனால், '#NoSir' ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.

3. நிர்பயா குற்றவாளி பவன் குப்தா குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கருணை மனு நிலுவையில் உள்ளதால், காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

4. மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் நாளை நடைபெறுகிறது. முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

5. முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற மத்திய அரசு பெண் ஊழியருக்கு, மூன்றாவது குழந்தைக்கு ஊதியத்துடன் பேறு கால விடுமுறை வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6. கர்நாடகாவில் பா.ஜ.க, அமைச்சர் ஸ்ரீராமுலு என்பவர், தன் மகளின் திருமணத்தை, தொடர்ச்சியாக 9 நாட்கள் கொண்டாட்டத்துடன் ரூ.500 கோடி செலவில் நடத்தி வருகிறார்.

7. வெங்காய வரத்து அதிகரித்துள்ளதையடுத்து மார்ச் 15-ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

8. தஞ்சையில் விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் கல்லீரலை 1 மணி நேரம் 50 நிமிடத்தில் மதுரை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

9. கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது.

10, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்த மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.

PARLIAMENT, NOSIR, MODI, TWITTER, NIRBHAYA, METTRU, EDAPPADI PALANICHAMI, CORONA, CHINA