இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. பவானிசாகர் அணையின் நீர்வரத்து 913 கன அடியில் இருந்து 244 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 26.7 டிஎம்சி; நீர்மட்டம் 97.36 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
2. ஜப்பான் கப்பலில் இருந்து இந்தியா்களை தனி விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை: இந்திய தூதரகம் அறிவிப்பு.
3. தனியார் பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரி வித்தார்.
4. திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் வங்கிக்கொள்ளை தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டால் தலைமையில் 3 டி.எஸ்.பி. 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 11 தனிப்படைகள் அமைத்து சி.சி.டி.வி. காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5. நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடி விட்டனர். மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளில் ஒன்று வெடித்து வீட்டில் இருந்த கார் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
6. தென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது.
7 .சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது இறந்த இந்திய வீரர் பிரதீப் மரணத்தில் மர்மம் இல்லை என்று விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
8.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம் கிராமத்தில் கோழிப் பண்ணையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சத்தியமூர்த்தி என்பவரின் பண்ணையில் ஷேசன் அரிசியை பறிமுதல் செய்து வட்டவழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
9. ஆந்திர மாநிலம் கடப்பாவில், செம்மரம் வெட்டி கடத்தியதாக, தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
10. அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் இந்தியா வந்த அவரது மகள் இவாங்கா, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.