இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், ஈரானிலும் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அங்கு ஒப்பந்த அடிப்படையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மற்றும் கேரள மீனவர்களை மீட்க இரு மாநில முதல்வர்களும் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

2. தமிழகம் முழுவதும், இன்று பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்கியது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதினர்.

3. டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.,க்கள் போராட்டத்தி ஈடுபட்டனர்.

4. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புது டெல்லி மற்றும் தெலுங்கானாவில் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5.  கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்து வரும் நிலையில் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

6. டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

7. இந்தியாவுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு ‘வை-பை’ இணைய வசதியை வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

8. கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் பணிகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளதால். அடுத்த பருவமழையின் போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5ஆவது ஏரியாக உருவெடுக்க உள்ளது.

9. துபாயில் சுமார் 30 ஆண்டுகளாக தொழில் செய்து அங்கேயே வாழ்ந்துவரும் சென்னைவாசி ஒருவர் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் சுமார் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை வென்றுள்ளார்.

10. கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வாஷிங்டனை சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் இரண்டாவது நபர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

CHINA, CORONA, +2 EXAM, DELHI RIOT, AMITHSHAW, CANE WATER, WI-FI, DUBAI, JACKPOT, AMERICA