இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. பாலக்கோட்டில் ரூ.500 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெங்கடசுப்பிரமணியனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.1,500 அபராதமும் விதித்து தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

2. டெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் சந்திப்பு : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.

3. 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனில் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பட்டியலையும் சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீஸ் கேட்டுள்ளது.

4. டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

5. வீட்டுவசதி வாரியம் சார்பாக நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நந்தனம் பகுதியில் அரசு ஒதுக்கியுள்ள வீட்டிற்கு நல்லக்கண்ணு விரைவில் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6. உசிலம்பட்டி அருகே மாட்டுப்பணனையில் மின்சார கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 30 பசு மாடுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

7. தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

8. பழநியில் அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து வந்த கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூசத் திருவிழா முடிந்தபிறகும் கூட பழநிக்கு பக்தர்கள் வருகை குறையாமல் உள்ளது.

ONELINENEWS