"கொரோனா மட்டும் நாட்டுக்குள்ள வந்துச்சு..." "தொலைச்சு கட்டிருவேன்..." "தலைவனுக்கு பயப்படுவதா?... கொரோனாவுக்கு பயப்படுவதா?" விழி பிதுங்கும் 'வடகொரிய' அதிகாரிகள்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொடர்பாகத் தன் கட்சியின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், வைரஸ் நாட்டுக்குள் பரவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிலிருந்து தொலைதூரத்தில் உள்ள நாடுகளுக்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் வடகொரியாவில் இதுவரை வைரஸ் பரவியதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா பரவுகிறது என்றவுடனே நாட்டின் எல்லைகளை மூடிய வடகொரிய அரசு இதுவரை வைரஸ் பரவல் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாகத் தன் கட்சியின் உயர் அதிகாரிகள், மற்றும் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ள வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், "ஒருவேளை வைரஸ் நாட்டுக்குள் பரவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என அதிகாரிகளை எச்சரித்துள்ளார். இந்தத் தகவலை அந்நாட்டு மத்திய செய்தி ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ளது. அதிபரின் இந்த உத்தரவால் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆடிப்போயுள்ளனர்.
வடகொரியாவில் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால் அதிபர் இவ்வளவு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாகத் தென் கொரியாவில்தான் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வடகொரியாவிலும் நிச்சயம் வைரஸ் பரவியிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.