'கொரோனா போற போக்க பாத்தா...' 'அடுத்து என்ன நடக்கப் போகுது?...' பிரபல 'மருத்துவ பத்திரிகை' அதிர்ச்சி 'தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டினால், இன்புளுவென்சா காய்ச்சலில் ஏற்பட்ட கதி இதிலும் ஏற்படும் என மருத்துவ பத்திரிகையில் ஆய்வு கட்டுரை ஒன்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

'கொரோனா போற போக்க பாத்தா...' 'அடுத்து என்ன நடக்கப் போகுது?...' பிரபல 'மருத்துவ பத்திரிகை' அதிர்ச்சி 'தகவல்...'

கொரோனா வைரஸ் தோன்றி 5 மாதங்களுக்குள் 200 நாடுகளுக்கு பரவி விட்டது. இதுவரை சுமார் 73 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஏறத்தாழ 4 லட்சத்து 12 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில் வைரஸ் பரவல் குறித்து ஆய்வுக்கட்டுரை ஒன்றை புகழ்பெற்ற ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் காவ் பூ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அதிர வைப்பதாகத்தான் இருக்கின்றன.

அதில், "1918-ம் ஆண்டு உலகமெங்கும் பரவிய இன்புளுவென்சா காய்ச்சலால் (எச்1என்1) இறப்புவீதம் 2 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. இதனால் 5 கோடி முதல் 10 கோடி வரையிலானவர்கள் பலி ஆனார்கள். கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டினால், இன்புளுவென்சா காய்ச்சலில் ஏற்பட்ட கதி இதிலும் ஏற்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவும் அபாயம் உள்ளது என்றும் அவ்வாறு பரவினால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரை ஒரு பாதுகாப்பான, நம்பகமான தடுப்பூசிதான் முக்கியமானது. அதை உருவாக்குகிற வரையில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும் அல்லது குறைவான உள்ளூர் பரவலை பராமரிக்க வேண்டும் என்பதே நோக்கம். இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை காலவரையின்றி வைரஸ் பரவல் தொடரக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்