‘வெள்ளை மாளிகையில தினமும் டிவி பார்த்தே பொழுத போக்குறாரு’.. பிரபல பத்திரிக்கையில் வந்த செய்திக்கு டிரம்ப் சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தி தொடர்பாக அவர் ட்விட் செய்துள்ளார்.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரழந்துள்ளனர். இதனால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமெரிக்காவில் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தியில், அதிபர் டிரம்ப் காலை மற்றும் மாலை பொழுதில் வெள்ளை மாளிகையில் உள்ள மிகப்பெரிய படுக்கையறையில் இருந்து கொண்டும், விஷேசமாக தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டும், நாள் முழுவதும் தொலைக்காட்சியை பார்த்து தனது பொழுதை கழிப்பதாக குற்றம் சாட்டியது.
இதனை அடுத்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அதிபர் பணியை செய்து வருகிறேன். வியாபார ஒப்பந்தம், ராணுவ கட்டமைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்றதை தவிர பிற காரணங்களுக்காக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் எனது அலுவலக வேலைகள் குறித்தும் எனது உணவு முறை குறித்தும் எழுதப்பட்டிருந்த கட்டுரையை படித்தேன், அது என்னை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது’ என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘என்னையும், அமெரிக்காவின் வரலாற்றையும் தெரிந்த மக்கள், நான்தான் மிகவும் கடுமையாக உழைக்கும் அதிபர் என்று கூறுகிறார்கள். நான் ஒரு கடுமையான உழைப்பாளி. அமெரிக்க வரலாற்றில் மற்ற அதிபர்கள் செய்ததை விட கடந்த மூன்றரை ஆண்டுகளில் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். பொய்யான செய்திகளை வெறுக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
The people that know me and know the history of our Country say that I am the hardest working President in history. I don’t know about that, but I am a hard worker and have probably gotten more done in the first 3 1/2 years than any President in history. The Fake News hates it!
— Donald J. Trump (@realDonaldTrump) April 26, 2020
FAKE NEWS, THE ENEMY OF THE PEOPLE!
— Donald J. Trump (@realDonaldTrump) April 27, 2020