"அவர்கிட்ட சொல்லிவைங்க. தொலைச்சு கட்டிடுவேன்" கொந்தளித்த புதின் ..என்ன ஆச்சு..?
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தையின் போது, கோபமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போர்
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பாராளுமன்றமும் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.
இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் காரணமாக இதுவரையில் 30 லட்சம் மக்கள் அண்டை தேசங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது.
அமைதி பேச்சுவார்த்தை
இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர இதுவரையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. உக்ரைன் வைக்கும் கோரிக்கையை ரஷ்யா தொடர்ந்து மறுத்துவருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இருநாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரோமன் அப்ரோமோவிச்-ம் கலந்துகொண்டார்.
தொலைச்சு கட்டிடுவேன்
இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் அதிபர் முன்வைத்த கோரிக்கைகளை ரோமன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் முன்வைத்ததாக தெரிகிறது. அப்போது கோபமடைந்த புதின்," அவரிடம் சொல்லி வையுங்கள்.. தொலைச்சு கட்டிடுவேன்" என கூறியதாக ரோமன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
புகழ்பெற்ற செல்சா கால்பந்து அணியின் முன்னாள் உரிமையாளரான ரோமன் அப்ரோமோவிச் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். ரஷ்யாவில் பிறந்த இவர் பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளிலும் இவர் கலந்துகொண்டு வருகிறார்.
உக்ரைன் அதிபரின் கோரிக்கைகளை கேட்டு, புதின் கோபமடைந்ததாக வெளிவந்த தகவல்கள் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்