“நம்ம குழந்தையை கழுத்தறுத்து கொன்னுட்டேன்!”.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ந்து போன கணவர்.. ஈரக்குலையை நடுங்கவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் தனது 8 மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனின் உள்ள ஒரு வீட்டுக்கு போலீஸார் அழைக்கப்பட்டனர். அங்கு வந்து பார்த்த போலீஸார் 8 மாத குழந்தை ஒன்று கழுத்து அறுபட்டு இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். பின்னர் குழந்தையை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனிடையே அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இலோனா என்கிற பெண் ஒருவர் அங்கு வந்த பெண் போலீசார் ஒருவருக்கு காபி தயாரித்துக் கொடுத்தார்.
அப்போது அவர் கூறிய சில தகவல்களின்படி அந்த வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் தனது 8 மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொன்று விட்டு தன் கணவனை அழைத்து, “உன் குழந்தையை கொன்று விட்டேன்” என்று சொன்னதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கருப்பு உடை அணிந்து இருந்த அந்த பெண்ணை போலீசார் விலங்கு போட்டு அழைத்துச் சென்றதாகவும் அப்போது அந்த பெண் போலீசாரை பார்த்து கத்திக் கொண்டே இருந்ததாகவும் இலோனா தெரிவித்தார். இதனையடுத்து அந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்