Jai been others

அன்னைக்கு 'நடந்தது' எல்லாமே பக்கா டிராமா...! ஏன் உங்களுக்கு 'துரோகம் செய்தேன் தெரியுமா...? 'மனைவி செத்து போனதா நம்பிட்டு இருந்த கணவன்...' - 6 வருஷம் கழிச்சு காத்திருந்த டிவிஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கென்யா நாட்டை சேர்ந்தவர் உச்சங்கா கயிரூ. இவருடைய அன்பு மனைவி லஹிரா அபிகைல், கடந்த 2015-ஆம் ஆண்டு இறந்து போய்விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவருடைய பிரேத உடலுக்கு இறுதிச் சடங்கையும் செய்துள்ளார் உச்சங்கா.

அன்னைக்கு 'நடந்தது' எல்லாமே பக்கா டிராமா...! ஏன் உங்களுக்கு 'துரோகம் செய்தேன் தெரியுமா...? 'மனைவி செத்து போனதா நம்பிட்டு இருந்த கணவன்...' - 6 வருஷம் கழிச்சு காத்திருந்த டிவிஸ்ட்...!

இந்த நிலையில், தற்போது கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உச்சங்கா பகுதில் ஏதோ ஒரு வேலை காரணமாக சாலையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அங்கு இறந்து போன தன்னுடைய மனைவியை உயிருடன் ஒரு இளைஞருடன் கண்டுள்ளார்.

அப்பொழுது 6 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த மனைவி இங்கு எப்படி வாழ்கிறார் என உச்சங்கா உச்சக்கட்ட அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார். பின்னர் உச்சங்கா அந்த பெண்ணிடம் சென்று நீ லஹிரா தானே என வினவியுள்ளார்.

அதற்கு அவரும் 'ஆமா' என்று கூறியுள்ளார். இதற்கு பின்னர் தான் லஹிரா இறந்துவிட்டதாக நாடகமாடிய அதிர்ச்சி தகவல் உறுதியானது.

Husband saw his wife alive now died 6 years ago in Kenya

இதையடுத்து உச்சங்கா போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் உச்சங்கா தெரிவித்திருப்பதாவது, "என் கண்ணையே என்னாலேயே நம்ப முடியவில்லை, அவள் என் கண் முன்னால் வைத்து தான் புதைக்கப்பட்டாள். ஆனால் அவள் மீண்டும் உயிருடன் இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது" என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.

தன்னுடைய கணவரிடம் திருமண உறவில் இருந்து விடுபட லஹிரா தனது போலி மரண நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

காதலனுடன் வாழ விரும்புவதால் கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால், அவரது கணவர் உச்சங்காவோ விவாகரத்து வழங்க மறுத்து விட்டார்.

இதுகுறித்து லஹிரா கூறுகையில், திருமணத்திற்கு பின்னர் நான் நடத்தப்பட்ட விதம், என் கணவருடன் மகிழ்ச்சியாக இல்லை, எனக்கு சுதந்திரம் தேவை என்பதால் இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நைரோபி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HUSBAND, KENYA, WIFE, 6 YEARS

மற்ற செய்திகள்