8 மாதங்களுக்கு முன் காணாமல் போன கணவர்.. வீட்டிலேயே உடலாக மீட்கப்பட்டதால் அதிர்ந்து போன பெண்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன தனது கணவர் குறித்து பெண்ணுக்கு அறிய வந்த தகவல், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

8 மாதங்களுக்கு முன் காணாமல் போன கணவர்.. வீட்டிலேயே உடலாக மீட்கப்பட்டதால் அதிர்ந்து போன பெண்!!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | லாட்டரி ஜெயிக்க போறதா கனவு கண்ட மனுஷன்.. இரண்டே வாரத்தில் தாறுமாறாக அடித்த அதிர்ஷ்டம்!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் மேட்ஜ் (Richard Maedge) (வயது 53). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், திடீரென காணாமல் போனதாக தகவல்கள் கூறுகினறது. வேலைக்கு சென்ற தனது கணவரை காணவில்லை என ரிச்சர்ட்டின் மனைவியான ஜெனிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

8 மாதங்களுக்கு பிறகு கிடைத்த அதிர்ச்சி

தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து அந்த நபரையும் போலீசார் தேடி வந்த சூழலில், ரிச்சர்ட்டின் வீட்டிலும் போலீசார் இரண்டு முறை சோதனை செய்துள்ளனர். இதற்கிடையே, தனது வீட்டில் குறிப்பிட்ட துர்நாற்றம் இருப்பதாக சில நாட்கள் கழித்து போலீசாரிடம் ஜெனிபர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டில் மீண்டும் சோதனை நடந்த சூழலில், சாக்கடை வாசனை தான் வீசுவதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆனால் அது தவிர அவர்களால் அந்த வீட்டிற்குள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Husband found 8 months later after missing in their home

Images are subject to © copyright to their respective owners.

பீரோ அருகே இருந்த உடல்?

அப்படி ஒரு சூழலில் தான் ரிச்சர்டின் மனைவியான ஜெனிஃபருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸுக்கு முன்பாக அவர் உள்ள வீட்டில் உள்ள சிறிய அலமாரி ஒன்றை தேடும் சமயத்தில் மம்மி போன்று சுற்றி வைக்கப்பட்டுள்ள உடல் ஒன்றை ஜெனிஃபர் கண்டுபிடித்துள்ளார். உடனடியாக இது பற்றி போலீசாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட சூழலில், அவர்கள் சம்பவ இடம் வந்து படுக்கை அறையில் உள்ள அலமாரிக்குள் எளிதில் கண்டுபிடிக்காத முடியாத வகையில் சேமிப்பு பகுதியில் இருந்த உடலை மீட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

Husband found 8 months later after missing in their home

Images are subject to © copyright to their respective owners.

அது ரிச்சர்ட் உடல் தான் என அறிய வந்த சூழலில், அது சிதைந்து போன மம்மியாகவும் மாறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மம்மியாக செய்யப்பட்ட அந்த உடலில் துர்நாற்றம் வீசவில்லை என்றும் அதன் காரணமாக தான் அந்த நபர் நீண்ட காலமாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபரீத முடிவு எடுத்தது தான் காரணமா?

இதனை தொடர்ந்து ரிச்சார்ட் இறந்ததற்கான காரணம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வந்த சூழலில் அவர் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக விபரீத முடிவை எடுத்து ரிச்சார்ட் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. வழக்கு தொடர்பான சில விசாரணைகள் நடைபெற்று வரும் சூழலில் அவர் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்திருப்பதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

Husband found 8 months later after missing in their home

Images are subject to © copyright to their respective owners.

அதே வேளையில், காணாமல் போன கணவர் எட்டு மாதங்களுக்கு பிறகு அந்த வீட்டிலேயே உடலாக கண்டெடுக்கப்பட்டதும் அவரது மனைவி மட்டும் இல்லாமல் அப்பகுதி மக்களையும் கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | 37 வயது வித்தியாசம்.. காதலித்து திருமணம் செய்த ஜோடி.. குழந்தை பெற்று கொள்ள போவதாக அறிவித்ததால் வைரலாகும் பின்னணி!!

HUSBAND, HOME

மற்ற செய்திகள்