படகு மேலே விழுந்த திமிங்கிலம்.. உறைந்துபோன பயணிகள்.. உலக வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுற்றுலா படகின் மேலே திமிங்கிலம் ஒன்று விழுந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

படகு மேலே விழுந்த திமிங்கிலம்.. உறைந்துபோன பயணிகள்.. உலக வைரல் வீடியோ..!

Also Read | "சுவத்துக்குள்ள இருந்து தான் சத்தம் வருது"..பூஜை அறைக்குள்ள வந்த விருந்தாளி.. பதறிப்போன குடும்பம்..!

மெக்சிகோவில் உள்ள கலிபோர்னியா வளைகுடாவின் அஹோம் என்ற கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் திமிங்கிலம் ஒன்று சுற்றுலா படகின் மீது விழுந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் சுற்றுலா படகில் பயணம் செய்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படகின் மீது திமிங்கிலம் விழுவதை அருகில் சென்ற படகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட அது தற்போது வைரலாக பரவிவருகிறது.

Humpback Whale Lands On Tourist Boat in Mexico

4 பேர் காயம்

திமிங்கிலம் விழுந்த படகில் பயணித்த 4 பேரில், இரு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இருந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமிங்கிலம் மோதியதால் காயமடைந்த நால்வரும்  லாஸ் மோசிஸ் பகுதியில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மற்றொரு ஆணுக்கு நெஞ்செலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னொருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், அஹொம் கடல்பகுதியின் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒமர் மெண்டோசா சில்வா திமிங்கிலம் தனக்கு ஆபத்தாக உணரும் சூழ்நிலையில் தான் இப்படி செயல்படும் எனவும் சுற்றுலா படகுகள் திமிங்கிலங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Humpback Whale Lands On Tourist Boat in Mexico

அஹொம் பகுதி மேயர் ஜெரார்டோ வர்காஸ் இதுபற்றி பேசுகையில்," திமிங்கிலங்களின் பிரம்மாண்ட அழகை நாம் தூரத்தில் இருந்து மட்டுமே ரசிக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும்" என எச்சரித்துள்ளார்.

டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலங்களில் ஹம்பக், நீல திமிங்கிலங்கள் மாற்றும் பசிபிக் க்ரே திமிங்கிலங்கள் இந்த பகுதிக்கு வருவது வழக்கமாகும். ஆனாலும், இதுபோன்ற சம்பவம் முதன்முறையாக இப்போது நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மெக்சிகோவில் திமிங்கிலம் ஒன்று விழுந்ததால் படகு சேதமடைந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

HUMPBACK WHALE, TOURIST BOAT, MEXICO, திமிங்கிலம், பயணிகள்

மற்ற செய்திகள்