மளிகைப்பொருள் வாங்க நின்னுட்டு இருந்தப்போ...! உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி..? நண்பர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்தது தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மளிகைப்பொருள் வாங்க நின்னுட்டு இருந்தப்போ...! உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது எப்படி..? நண்பர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

26 வயசுல மரணம்.. மைக்ரோசாஃப்ட் சிஇஓ-வின் மகன் பற்றி வெளியான உருக்கமான தகவல்..!

உக்ரைன் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனால் இங்கு இருக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது. இந்த சூழலில் கார்கிவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துரை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த தகவல் வெளியானதும் நவீன் வீட்டின் முன்பு உறவினர்கள் குவிய தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் உயிரிழந்த மாணவர் நவீனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். இதனை அடுத்து இரு நாட்டு தூதர்களையும் தொடர்பு கொண்ட மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

How Indian student Naveen killed in Ukraine, New details

இந்த நிலையில், மாணவர் நவீன் உயிரிழந்தது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நவீனின் நண்பர்கள் NDTV ஊடகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதில் காலை மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடை ஒன்றின் முன் நவீன் வரிசையில் நின்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது ரஷ்ய ராணுவம் திடீரென வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், நவீன் உள்ளிட்ட பலர் உடல் சிதறி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தற்போது அங்கு தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதால், நவீன் உடல் வைக்கப்பட்டிள்ள மருத்துவமனைக்கு அவரது நண்பர்களால் செல்ல முடியவில்லை.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ள நவீன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கார்கிவில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வந்துள்ளார். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கார்கிவ் இருப்பதால், அங்கு ரஷ்யாவின் தாக்குதல் மற்ற நகரங்களை விட அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொரோனா லாக்டவுனில் நிறுத்தப்பட்ட சேவை மீண்டும் வரப்போகுது..!

INDIAN STUDENT, UKRAINE, MEDICAL STUDENT, இந்திய மாணவர், நண்பர்கள், ரஷ்ய தாக்குதல், உக்ரைன், வெடிகுண்டு தாக்குதல்

மற்ற செய்திகள்