VIDEO: 'கொரோனா கண்காணிப்பு முகாம்' இடிந்து விழுந்து... 26 பேர் பலி!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கிய ஓட்டல் இடிந்து விழுந்ததில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஃபுஜியான் மாகாணம், லிச்செங் மாவட்டத்தில் 5 மாடிகளை கொண்ட க்சின்ஜியான் என்ற ஓட்டல் தற்காலிக கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, சுகாதாரப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், கொரோனா அறிகுறி உள்ள நபர்கள் அதில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையில், கடந்த 7-ம் தேதி இரவு இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்தது. மேலும், அங்கு தங்கியிருந்த 71 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, கட்டிட இடுபாடுகளில் சிக்கி இருந்த 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நேற்றுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து இன்று மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், கொரோனா கண்காணிப்பு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3 பேர் இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகத் தெரிகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக மீட்பு படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
A man was rescued 69 hours after a hotel collapse in Fujian, China pic.twitter.com/qWKTAt9RFg
— China Xinhua News (@XHNews) March 11, 2020