'விமானங்களை மடக்கிப் பிடித்து... வெளியேற விடாமல் தடுக்கும் தாலிபான்கள்'!?.. 'இன்னும் ஏன் இப்படி செய்யணும்'?.. அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து பல நூறு மக்களுடன் வெளியேற காத்திருக்கும் சுமார் நான்கு விமானங்களை தாலிபான்கள் சில நாட்களாக தடுத்து நிறுத்தி வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து விமானங்களை வெளியேற விடாமல் தாலிபான்கள் தடுத்து நிறுத்தியுள்ளதன் உண்மை நிலை தெரியாத நிலையில், அந்த விமானங்களையும் நூற்றுக்கணக்கான மக்களையும் மீட்க அமெரிக்காவின் உதவி கோரப்பட்டுள்ளது.
வடக்கு நகரான மசார்-இ-ஷெரீப் விமான நிலையத்தில் நடந்தேறும் இந்த விவகாரம் தொடர்பில் ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அந்த விமானங்களில் உள்ள பயணிகள் அனைவரும் ஆப்கன் மக்கள் எனவும், அவர்களில் பலருக்கு கடவுச்சீட்டு அல்லது விசா இல்லை எனவும், இதனாலையே நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்றும் கூறினார். ஆனால், நிலைமை சீர்செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விமானங்களில் அமெரிக்க மக்களும் உள்ளனர் எனவும், அவர்களை தாலிபான்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது எனவும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், தாலிபான்கள் அப்படியான ஒரு சூழலை உருவாக்கமாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், மசார்-இ-ஷெரீஃப் குடியிருப்பாளர்கள் சிலர், பயணிகள் எவரும் விமான நிலையத்தில் இல்லை என்றும், குறைந்தது 10 குடும்பங்கள் உள்ளூர் ஹொட்டலில் காத்திருப்பதாகவும் கூறினர். யாருக்கும் கடவுச்சீட்டு அல்லது விசா ஆகியவை இல்லை எனவும், ஆனால் தாங்கள் அமெரிக்கா, ஜெர்மனி ராணுவத்தினருடன் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மசார்-இ-ஷெரீஃப் விமான நிலையமானது சமீபத்தில் தான் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டன. அதுவும், துருக்கி நோக்கி மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளியேற காத்திருக்கும் விமானங்கள் கட்டார் நாட்டுக்கு செல்லுமா அல்லது எந்த பகுதிக்கு செல்லவுள்ளன என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்