மருத்துவமனைக்குள் ‘இந்த’ இடங்களில் அதிகமாக இருக்கும் கொரோனா வைரஸ்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் காணப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவமனைகளில் உள்ள காற்றை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், ஐசியூ மற்றும் குளியறையில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்ற இடங்களை ஒப்பிடுகையில் ஐசியூக்களில் மாசுபாடு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறைகளில் சேகரிக்கப்பட்ட காற்று மாதிரிகளில் 17% கொரோனா வைரஸ் காணப்படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் இந்த சதவீதம் ஐசியுக்களில் 25.2% ஆக இருக்கிறது. குறைந்தபட்சமாக 21 காற்று மாதிரிகளில் 5ல் கொரோனா வைரஸ் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 24 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10 ஆய்வுகள் சீனா, அமெரிக்கா, ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர், ஈரான், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நோய் தொற்று தீவிரத்தை பொறுத்து அந்த அறைகளில் உள்ள காற்றிலும் வைரஸ் காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்