'என்னோட மார்பகங்களை பெருசாக்கணும்'... 'பிரபல ஆடை நிறுவனத்தின் வாரிசுக்கு வந்த விபரீத ஆசை'... பிறந்த நாளுக்கு முன் நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மனிதர்கள் சில நேரம் இயற்கைக்கு எதிராகச் செல்லும்போது அது விபரீதத்தில் சென்று முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

'என்னோட மார்பகங்களை பெருசாக்கணும்'... 'பிரபல ஆடை நிறுவனத்தின் வாரிசுக்கு வந்த விபரீத ஆசை'... பிறந்த நாளுக்கு முன் நடந்த விபரீதம்!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் தான் லா டிங் பாங்க். இவர் பிரபல துணி பிராண்டான 'Bossini'யின் நிறுவனர். இவரின் 7.8 பில்லியன் டாலர் சொத்தின் வாரிசு தான் போனி எவிடா லா. இவர் தனது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் அவருக்கு திடீரென விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனது மார்பகங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெரிதாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதனிடையே தென்கொரியாவின் சியோல் நகரத்தில் உள்ள கிளீனிக் ஒன்றில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட போனி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Hong Kong fashion empire heiress dies during illegal liposuction

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்கள். இதையடுத்து மருத்துவமனை சார்பில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது சட்டத்திற்குப் புறம்பான இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பாக போனி, சட்ட ஆலோசனை எதுவும் பெறவில்லை. மயக்க மருந்து நிபுணர்கள் இல்லாமல், உறுதிப்படுத்தப்படாத பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

போனிவின் மரணத்திற்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு கொடுக்கப்பட்ட மயக்கமருந்து தான் காரணமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளார்கள். அந்த மருந்தை மருத்துவர்கள் பரிசோதிக்காமல் கொடுத்தது தான் மரணத்திற்குக் காரணம் என போலீசார் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிலையில் போனியின் மரணம் குறித்துப் பேசிய அவரது கணவர், ''போனியின் பேராசையும், அவரின் முழு அலட்சியமும் தான் அவரது உயிரைப் பறித்துள்ளது'' என வேதனையுடன் கூறியுள்ளார்.

Hong Kong fashion empire heiress dies during illegal liposuction

7.8 பில்லியன் டாலர் சொத்து இருந்தும், ஒரு தவறான முடிவு கண்ணுக்கு முன்பு இருந்த அழகான வாழ்க்கையை அழித்தது தான் சோகத்தின் உச்சம்.

மற்ற செய்திகள்