'ஒரே வீட்டுல தான் இருந்தோம்'... 'ஆனா தாம்பத்திய உறவு மட்டும் நடக்கல'... 'கோர்ட்டுக்கு போன தம்பதி'... இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்குமாறு கோரி தம்பதிகள் நீதிமன்றத்தை நாடினார்கள்.

'ஒரே வீட்டுல தான் இருந்தோம்'... 'ஆனா தாம்பத்திய உறவு மட்டும் நடக்கல'... 'கோர்ட்டுக்கு போன தம்பதி'... இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

சீக்கிய பெண் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மேற்படிப்பிற்காகக் கனடா வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு சீக்கிய வாலிபருடன் அவருக்குக் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வாழ விரும்பியுள்ளார்கள். ஆனால், திருமணத்துக்கு முன் ஒரே வீட்டில் வாழ அவர்களது மதம் அனுமதிக்காது என்பதால், அரசு அலுவலகம் ஒன்றில் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

Honest and sincerely held religious belief' grounds for avoiding sex

ஆனால் அவர்களால் தாம்பத்திய உறவை மேற்கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் மத வழக்கம். அதாவது அவர்கள் சீக்கிய முறைப்படி குருத்துவாரா ஒன்றில் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அவர்கள் தாம்பத்திய உறவு கொள்ளமுடியும். ஆகவே, ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், அவர்களுடன் வேறு சில நண்பர்களும் தங்கியிருக்க, இந்த தம்பதியரும் நண்பர்கள் போல வெவ்வேறு அறைகளில்தான் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அந்த பெண்ணின் கணவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இது இப்படியே போனால் தனது படிப்பிற்கு இடையூறு ஏற்படும் எனக் கருதிய அந்த பெண், இருவரும் பிரிந்து விடலாம் என முடிவு செய்தனர்.

Honest and sincerely held religious belief' grounds for avoiding sex

இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தாம்பத்திய உறவில் ஈடுபட இயலாத நிலை இருந்தால் மட்டுமே திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க இயலும் எனக் கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துவிட்டது.

இந்த தீர்ப்பைச் சற்றும் எதிர்ப்பாக்காத அந்த தம்பதியர் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து மேல்முறையீட்டிற்கு அந்த தம்பதி சென்ற நிலையில், ''நமது நாடு பல்வேறு கலாச்சாரங்கள் கொண்டவர்கள் வாழும் நாடு என்றும், வழக்குத் தொடர்ந்தவர்களின் கலாச்சார வழக்கங்களையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்'' என்று கூறியுள்ளது.

மேலும் அந்த தம்பதியர் குருத்துவாராவில் திருமணம் செய்த பின்னர் மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும் என்ற தங்கள் மத வழக்கத்தின் அடிப்படையில் மட்டுமே உடல் ரீதியாக இணைந்து வாழாமல் இருந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் தாம்பத்திய உறவு கொள்ளமுடியாமல் இருந்ததற்கான காரணம் முற்றிலும் அவர்களது மத நம்பிக்கையைச் சார்ந்தது. அவர்களது மத நம்பிக்கையையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

Honest and sincerely held religious belief' grounds for avoiding sex

எனவே, மதத்தின் அடிப்படையில் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என்றாலும், அவர்களது திருமணம் செல்லாது'' என்று கூறி தீர்ப்பளித்துள்ளார் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி. இதற்கிடையே இதுபோல் தாம்பத்திய உறவு இல்லாததால் திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரிய பல வழக்குகள் கனடாவில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்