4 மாசமா வீட்டுக்குள்ள கேட்ட குறட்டை சத்தம்.. "ஆத்தாடி.. இவ்வளவு நாளா வீட்டுக்குள்ள இதையா வச்சிருந்தீங்க".. ஷாக் ஆன மீட்புப்படை வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பல நாட்களாக ஒரு வீட்டில் குறட்டை சத்தம் கேட்டிருக்கிறது. அதற்கான காரணத்தை வீட்டின் உரிமையாளர் கண்டுபிடித்தபோது பீதியில் உறைந்து போயிருக்கிறார்.
குறட்டை
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லேக் டஹோ பகுதியில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களாக வினோத சத்தம் கேட்டுள்ளது. குறட்டை போலவே இருந்த அந்த சத்தத்தினால் வீட்டில் இருந்தவர்கள் குழப்பம் அடைந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் பக்கத்து வீட்டில் யாரோ குறட்டை விடுகிறார்கள் என நினைத்த அவர்கள் ஒருகட்டத்தில் அது குறட்டை தானா என சந்தேகிக்க தொடங்கினர். அப்படி ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக சத்தம் வந்திருக்கிறது. இதுபற்றி அக்கம் பக்கத்தில் கேட்டும் அவர்களுக்கு எந்த சத்தமும் வராததால் வீட்டு மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வெளியே வந்த உண்மை
ஒரு கட்டத்தில் இந்த சத்தத்தோடு வாழ அவ்வீட்டினர் பழகிக் கொண்டனர். அப்போது ஒருநாள் எதேச்சையாக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார் உரிமையாளர். அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திகைக்க வைத்திருக்கிறது. வீட்டின் அதிகம் உபயோகிக்கப்படாத பகுதியில் ஒரு தாய் கரடியும் 4 குட்டிகளும் இருந்திருக்கின்றன. இதனை அடுத்து உள்ளூர் தொண்டு நிறுவனமான பியர் லேக் குரூப்பை உதவிக்கு அழைத்துள்ளனர் வீட்டினர்.
லேக் டஹோ பகுதியில், கரடிகளை கையாளும் குழுவான லேக் பியர் க்ரூப் கரடிகளை பிடித்து பத்திரமான இடத்தில் விட்டதாக தெரிகிறது. "அமெரிக்காவில் பனிக்காலம் துவங்கும் நேரத்தில் கதகதப்பான இடங்களை தேடி கரடிகள் செல்லத் துவங்கும். அப்படித்தான் இந்த வீட்டில் பயன்படுத்தப்படாத இடத்தை கரடிகள் தேர்ந்தெடுத்து தங்கியுள்ளன" என கூறியுள்ளது இந்த குழு.
கற்பனை
தொடர்ந்து வீட்டுக்குள் குறட்டை சத்தம் வரவே, ஒருவேளை இது கற்பனையாக கூட இருக்கலாம் என வீட்டார்கள் ஆரம்பத்தில் நினைத்திருக்கிறார்கள். ஆனால், சத்தத்திற்கு காரணம் கரடிதான் என்பது பின்னால் தான் தெரியவந்திருக்கிறது. குளிர்காலம் முடிந்து வெளியே செல்லும் தருவாயில் கரடிகள் இருந்ததாக அந்தக் குழு தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் பல நாட்களாக வீட்டுக்குள் சத்தம் வருவதாக வீட்டினர் குழம்பி இருந்த நிலையில் வீட்டுக்குள் கரடி வசித்து வந்தது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்