‘3TB-க்கு பகிரப்பட்ட’. ‘4000 ஆபாச வீடியோக்கள்!’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்!’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி!’
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளின் சிசிடிவி கேமிராக்களும், வெப் கேமராக்களும் ஹேக் செய்யப்பட்டு ஆபாச இணையத்தில் வீடியோக்களை பதிவேற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 நிமிடங்கள் முதல் தொடங்கும் இந்த வீடியோக்களில் பெண்கள் ஆடைகள் அகற்றும் சூழல் மற்றும் குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை முதலான வீட்டின் பல இடங்களில் இருப்பது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள், முதியவர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை கண்காணிக்க நிறுவப்பட்டுள்ள பொதுவான இணைய நெறிமுறை (ஐபி) கேமராக்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு,
டிஸ்கார்ட் எனும் சமூக அரட்டை தளத்தில் உறுப்பினர்களாக உள்ள 1000 பேரில் 70 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் 3TB க்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்களைப் பகிர்ந்து கொண்டதும், இதற்காக ஒரு முறை தவணை சந்தாவாக 150 அமெரிக்க டாலர்கள் ஒவ்வொருவரும் செலுத்தியதும் தெரிய வந்துள்ளது. தாய்லாந்து, தென் கொரியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் வீடுகளின் காமிராவிலிருந்து இந்த காட்சிகளும் ஹேக் செய்யப்பட்டு சுமார் 4,000 வீடியோக்களும் படங்களும் அடங்கிய 700MB அளவிலான"மாதிரி" கிளிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதேபோல் பல ஐபி கேமராக்கள் பொது இணையம் வழியாக தொலைவிலிருந்து அணுகும் வகையில் நிறுவப்பட்டுள்ளதாலும், இவற்றின் பலவீனமான கடவுச்சொல்லாலும் இவற்றை எளிதில் ஹேக் செய்துவிடுகின்றனர். ஆகவே "உங்கள் கேமரா பாதுகாப்பானது என கருத வேண்டாம்," என்றும் தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸிற்கான ஆசிய-பசிபிக் தீர்வுக் கட்டிடக் கலைஞரான கிளெமென்ட் லீ, தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்