உருக்குலைந்த 2200 வருச பழமையான கோட்டை.. உலகையே கதிகலங்க வெச்ச நிலநடுக்கம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உருக்குலைந்த 2200 வருச பழமையான கோட்டை.. உலகையே கதிகலங்க வெச்ச நிலநடுக்கம்!!

                                                                                                   Images are subject to © copyright to their respective owners

ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வந்தனர்.

ஆனால், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய செய்தது. இந்த நடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான  சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது.

துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், துருக்கியில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

துருக்கியின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பங்களில் ஒன்றாகவும் இது மாறி உள்ளது. உலகளவில் கடும் அதிர்வலைகளை இந்த பூகம்பம் ஏற்படுத்தி உள்ள சூழலில், மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் துருக்கி நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

Historical Gaziantep castle destroyed after earthquake in turkey

Images are subject to © copyright to their respective owners

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, துருக்கியில் அமைந்துள்ள சுமார் 2200 ஆண்டுகள் பழமையான காஜியான்டெப் கோட்டை, தற்போது தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் பைசன்டன்கள் மற்றும் ரோமானியர்கள் பயன்படுத்திய பழமையான கோட்டை தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோட்டையானது, இரண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமானிய காலத்தில் கட்டப்பட்ட ஒரு காவல் கோபுரம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க காஜியான்டெப் கோட்டையின் பழைய புகைப்படங்கள் மற்றும் புதிய புகைப்படங்கள் ஆகியவை தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

TURKEY, GAZIANTEP

மற்ற செய்திகள்