'போன ஜனவரியில 35வது இடம்!'.. இப்ப உலகின் 2வது பணக்காரர்!.. பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி!.. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி, 2- வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை தொடர்ந்து எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 7.2 பில்லியனில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல் தகவல்களின்படிஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
5வது இடத்தில் இருந்த எலான் மஸ்க், மைக்ரோசாப்ட் குழும முன்னாள் தலைவர் பில்கேட்சை 3வது இடத்திற்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவில் முதல் முறையாக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியதன் மூலம், டெஸ்லா முதல் முறையாக S&P 500 குறியீட்டின் கீழ் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக டெஸ்லா பங்குகள் வளர்ச்சி அடைந்தன.
இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 100.3 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் யாரும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை குறுகிய காலத்தில் அடைந்ததில்லை.
கடந்த ஜனவரி மாதம் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்சின் 500 பணக்காரர்கள் பட்டியலில், எலான் மஸ்க் 35வது இடத்தை பிடித்தார். ஆனால் இந்த 10 மாத காலத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்