உலகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்.. இது மட்டும் இருந்தா 192 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே போகலாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சர்வதேச அளவில் குடியுரிமை மற்றும் குடியேற்றம் ஆகியவை குறித்த ஆலோசனைகளை வழங்கிவரும் நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் (Henley & Partners) ஒவ்வொரு ஆண்டும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸை வெளியிடுவது வழக்கம். உலகின் வலிமையான பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் நாடுகளை தரவரிசைப்படுத்துவதே இந்த ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் மதிப்பீடு ஆகும்.

உலகின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்.. இது மட்டும் இருந்தா 192 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே போகலாம்..!

சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (IATA) அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் இந்த இண்டெக்ஸ் தயாரிக்கப்படுகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம். இந்த பட்டியலில் மொத்தம் 111 நாடுகளின் பாஸ்போர்ட்கள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள்

Henley Passport Index ; world's most powerful passports for 2022

உலகமெங்கிலும் பரவிவரும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகள் வெவ்வேறு விதமான பயண கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இருப்பினும் இதுபோன்ற தற்காலிக கட்டுப்பாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என  ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே வீடியோ.. டோட்டல் டேமேஜ்.. டேமேஜான ரோட்டைக் கண்டு கொதித்து குழந்தை எடுத்த நிரூபர் அவதாரம்! - வீடியோ

ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய நாடுகள்

ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் உலகின் வலிமையான பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் வலிமையான பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

Henley Passport Index ; world's most powerful passports for 2022

83 வது இடத்தில் இந்தியா

இந்த பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட்டிற்கு 83வது  இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 60 நாடுகளுக்கு விசா எடுக்காமல் பயணிக்கலாம் எனவும் இந்த இன்டெக்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்ட சித்தார்த்.. வரவேற்று சாய்னா கொடுத்த சூப்பர் பதில்

சரி, இப்போது உலகின் வலிமையான டாப் 10 பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் நாடுகள் மற்றும் அதன்மூலம் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கைகளைக் கீழே காணலாம்.

டாப் 10 பவர்புல் பாஸ்போர்ட்கள்

1. ஜப்பான், சிங்கப்பூர் (192)

2. ஜெர்மனி, தென் கொரியா (190)

3. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் (189)

4. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் (188)

5. அயர்லாந்து, போர்ச்சுகல் (187)

6. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா (186)

7. ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, கிரீஸ், மால்டா (185)

8. போலந்து, ஹங்கேரி (183)

9. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (182)

10. எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவேனியா (181)

Henley Passport Index ; world's most powerful passports for 2022

உலகின் வலிமை குறைந்த பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் நாடுகள்  

104. வட கொரியா (39)

105. நேபாளம் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் (37)

106. சோமாலியா (34)

107. ஏமன் (33)

108. பாகிஸ்தான் (31)

109. சிரியா (29)

110. ஈராக் (28)

111. ஆப்கானிஸ்தான் (26)

POWERFUL PASSPORTS, HENLEY & PARTNERS, QUARTERLY REPORT, DESIRABLE PASSPORTS, பவர்ஃபுல் பாஸ்போர்ட், ஹென்லி & பார்ட்னர்ஸ்

மற்ற செய்திகள்