Heey Googoo ஏதாவது பேசு.. கூகுள் டிவைசை முதல்முறை பார்த்த பாட்டி.. Voice-அ கேட்டுட்டு அவங்க கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட்.. Cute வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வயதான பாட்டி ஒருவர் முதன்முதலில் கூகுள் ஸ்பீக்கரை பயன்படுத்தும் வீடியோ சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Heey Googoo ஏதாவது பேசு.. கூகுள் டிவைசை முதல்முறை பார்த்த பாட்டி.. Voice-அ கேட்டுட்டு அவங்க கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட்.. Cute வீடியோ..!

Also Read | "நான் 10-வது பாஸ் பண்ணமாட்டேன்னு எங்கப்பா நெனச்சாரு".. மாணவியின் கேள்விக்கு தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்.. Cool வீடியோ..!

டிஜிட்டல் உலகத்தில் வாழ்த்துக்கொண்டிருக்கும் நாம் நினைத்த மாத்திரத்தில் இணையத்தில் மூலமாக அதனை செயல்படுத்திட முடிகிறது. தகவல் தொழ்ல்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியும் இணையத்தின் வீச்சும் மனிதர்களுக்கு பல கொடைகளை அளித்திருக்கிறது. இந்த கண்டுபிடிப்புகள் பலரையும் ஆச்சர்யப்படுத்த தவறுவதில்லை. முதன் முதலாக டிஜிட்டல் சாதனங்களை உபயோகிக்கும் நம்முடைய அனுபங்களை எளிதில் வெளிப்படுத்திவிட முடியாது. அப்படியான ஒரு அனுபவம் தான் வயதான பாட்டி ஒருவருக்கும் கிடைத்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Heey Googoo Grandmother Reaction while using Google Assistant

Hey  Google

இந்த வீடியோவில் குடும்பத்தினர் உணவு அருந்தும் மேஜையினை சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அதில் வயதான பாட்டி ஒருவர் கூகுள் ஸ்பீக்கரில் பேச முற்படுகிறார். குடும்பத்தினரில் ஒருவர் Hey  Google எனக் கூறும்படி பாட்டியிடம் சொல்கிறார். ஆனால் பாட்டியோ Heey Googoo என வித்தியாசமாகவும் அழகாவும் அதனை அழைக்க கருவியில் எந்த சலனமும் ஏற்படவில்லை.

இதனால் அவர் சோகமடைய, நாளைய வானிலை பற்றி கேட்கும்படி அருகில் இருப்பவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து அந்த பாட்டியும் "Hey  Google, நாளைய வானிலை எப்படி இருக்கும்?" எனக் கேட்கிறார். அப்போது கருவி பாட்டியின் கேள்வியினை உணர்ந்து வானிலை நிலவரத்தை தெரிவிக்கிறது. முதன்முறையாக கூகுள் ஸ்பீக்கரில் இருந்து குரல் வெளிப்பட்டவுடன் திகைத்துப்போன பாட்டி தனது இருக்கையில் இருந்து எழுந்துவிடுகிறார்.

Heey Googoo Grandmother Reaction while using Google Assistant

வைரலான வீடியோ

மேலும், அந்த குரலை ஆச்சர்யத்துடன் அவர் கேட்பதுடன், அருகில் இருந்தவர்களிடம் அது பேசுகிறது என ஆனந்தமாக கூறுகிறார். இவருடைய ரியாக்ஷனை பார்த்து குடும்பத்தினர் புன்னகைக்கின்றனர். இந்த வீடியோவை ஜெனி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,"முதல்முறை கடவுள் உங்களிடம் பேசினால் இப்படித்தான் இருக்கும்" என எழுதியுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 11 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். மேலும், 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இதனிடையே, பாட்டியின் Heey Googoo எனும் உச்சரிப்பை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் சிலாகித்து வருகின்றனர்.

 

Also Read | கோவிலில் தன்னை மறந்து பாடும் சிறுவன்.. சொக்கிப்போய் நின்ன பக்தர்கள்.. மலைக்க வைக்கும் மழலையின் வீடியோ..!

HEEY GOOGOO, GRANDMOTHER, REACTION, GOOGLE ASSISTANT

மற்ற செய்திகள்