VIDEO: கையில ‘சிகப்பு பை’.. கூலாக சாலையை கடந்து சென்ற ‘தலை’ இல்லா மர்ம மனிதர்.. ‘ஷாக்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்தலை இல்லாமல் சாலையைக் கடந்து செல்லும் மர்ம மனிதரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சில தினங்களாக இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், பரபரப்பான சாலை ஒன்றில் நபர் ஒருவர் கையில் சிகப்பு நிற பையுடன் சாலையை கடந்து செல்கிறார். ஆனால் அவருக்கு தலை இல்லை. வாகனங்கள் பலவும் சென்றுகொண்டிருக்கும் சாலையில் எந்தவித பயமும் இன்றி கூலாக சாலையை கடந்து செல்கிறார்.
இந்த வீடியோ ஃபெப்ரி அடிக்ஷான் (Febry Adixxon) என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இது தற்போது ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? இது உண்மையா? என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
VIRAL, HEADLESS